சுவிட்ஸர்லாந்தின் பிராந்திய சபை உறுப்பினரும் அந்த நாட்டில் நீதி மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் தலைவருமான
(Simonetta Sommaruga) சிமோனெட்டா சோமாருகா அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளார்.
இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் அவர் அதற்கு முன்னர் இலங்கைக்கும் வரவுள்ளார். இந்த தகவலை இந்திய செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
இலங்கை வரும் அவர்கள் இலங்கையில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் செயற்பாடுகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்காரணமாக சுமார் 50ஆயிரம் பேர் வரை சுவிட்ஸர்லாந்தில் அரசியல் அடைக்கலம் பெற்றுள்ளனர். அவர்களில் அரைவாசிப்பேருக்கு சுவிஸின் பிரஜாவுரிமையும் கிடைத்துள்ளது
இந்தநிலையில் இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு சுவிட்ஸர்லாந்து பல்வேறு உதவிகளையும் இலங்கைக்கு வழங்கிவருகிறமை குறிப்பிடத்தக்கது.