புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 அக்., 2016

புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் கடந்தஆட்சியில் வழங்கவில்லை என குற்றச்சாட்டு

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் மாணவர்களுக்கு புலமைப் பரிசில் கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்த ப்பட்டுள்ளது.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவியருக்கு கடந்த அரசாங்கம் புலமைப் பரிசில் கொடு ப்பனவு தொகைகளை வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.சுமார் ஐந்து கோடியே எழுபத்து ஐந்து லட்சம் ரூபா கொடுப்பனவு தொகை நிலுவையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2005ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் இவ்வாறு புலமைப் பரிசில் கொடுப்பனவு தொகை நிலுவையில் இருப்பதாக கணக்காய்வாளர் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலுவைக் கொடுப்பனவுகளை கூடிய விரைவில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
தற்போதைய கொடுப்பனவுகள் கால தாமதமாகவில்லை எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ad

ad