புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மார்., 2017

ஜெனிவாவில் இலங்கை குழுவை உளவு பார்க்கிறதாம் பிரித்தானியா

ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தூதுக்குழுவினரின் பணிகளை கண்காணிக்க பிரித்தானிய புலனாய்வு சேவையுடன்
தொடர்புடையவர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டேவிட் வெஹேலி என்ற நபரே இவ்வாறு உளவு பார்க்க பயன்படுத்தப்பட்டு வருவதாக சிங்கள வாரப் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

இலங்கை தூதுக்குழுவினர் அமர்ந்துள்ள இடத்தில் அமர்ந்து அவர்களின் உரைகளை ஒளிப்பதிவு செய்யும் பணியே இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. டேவிட் வெஹேலி புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து செயற்பட்டவர். அத்துடன் 2002 ஆம் ஆண்டு போர் நிறுத்தம் அமுலில் இருந்த காலத்தில் இவர் இலங்கை தொடர்பான அறிக்கை ஒன்றையும் தயாரித்திருந்தார். மேலும் டேவிட் வெஹேலி ஐக்கிய நாடுகளின் முன்னாள் அதிகாரி யஸ்மின் சூகாவுடன் இணைந்து இலங்கையின் மனித உரிமை தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ad

ad