11 மார்., 2017

WelcomeWelcome கூட்டமைப்பை பதிவு செய்யாததால் புதுக்கட்சி தொடங்கினாராம்! - கதை விடுகிறார் கருணா

முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் உருவாகியுள்ள தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமைக் காரியாலயம்
இன்று காலை மட்டக்களப்பு, கல்லடி, புதிய கல்முனை வீதியில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மத்திய குழு உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது விநாயகமூர்த்தி முரளிதரன் உட்பட மத்திய குழு உறுப்பினர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கட்சி தலைமையகம் திறந்து வைக்கப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்யாத நிலையிலேயே தமிழர்களுக்கான புதிய கட்சியை ஆரம்பித்துள்ளதாக இங்கு உரையாற்றிய விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.