11 மார்., 2017

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டத்துக்கு ஆதரவாக வவுனியாவில் பேரணி!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியாவில் 16ஆவது நாளாக மேற்கொண்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு
ஆதரவு தெரிவித்து புதிய ஜனநாயக மாக்சிச லெனிசக் கட்சியின் ஏற்பாட்டில் வவுனியாவில் இன்று ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டது. இன்று காலை 11 மணியளவில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமாகி கண்டி வீதிவழியாக காணமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் இடத்திற்கு இந்தப் பேரணி வந்தடைந்தது.
  
ஜனநாயக மாக்சிச லெனிசக் கட்சியின் கட்சியின் முக்கியஸ்தர் செந்தில்வேல் தலைமையில் இடம்பெற்ற இவ் பேரணியில், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பதில் என்ன, அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய், பயங்கரவாத தடைச்சட்டத்தினை இரத்துச்செய், மைத்திரி ரணில் அரசே வாக்குறுதி என்னா? போன்ற வாசகங்ளைத் தாங்கியவாறு பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்.