செவ்வாய், பிப்ரவரி 06, 2018

தமிழர்களுக்கென்று வாதாடவும் வழிகாட்டவும் உள்ள ஒரேயொரு அரசியல் கட்சி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு

தாமரைக்கேணி, தமிழ் மக்கள் இழந்தது, ஏராளம். இழப்பதற்கு இனி எதுவுமில்லை. அவர்களுக்குள் ஒற்றுமையும்,
அரசியல் பலமும், இப்போது தேவைப்படுகிறது.
அது இருந்தால்தான் அவர்களால் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ப தாக்குப்பிடித்து தமது இருப்பை தக்க வைத்துக்கொள்ள முடியும் என அகில இலங்கை அரச பொது ஊழியர் சங்கத்த லைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தார்.ஆறுமுகத்தான் குடியிருப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப் புரைக்கூட்டத்தில் கலந்து கொண்டே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்….,
நமது தமிழ் மக்கள் இழந்தவை ஏராளம் இழப்பதற்கு இப்போது எதுவுமில்லை தமிழர்களுக்கென்று வாதாடவும் வழிகாட்டவும் உள்ள ஒரேயொரு அரசியல் கட்சி தமிழ்த் தேசிய கூட்டமைப்புதான்,
இது தமிழினத்தின் ஏகோபித்த முடிவு. நான் ஒரு தொழிற்சங்கவாதியாக இருந்த போது, தமிழர்களுக்கென ஒரு அரசியல் கட்சியும் தலைமையும் அவசியம் என்பதை நடைமுறையில் சந்தித்த இடர் பாடுகளின்போது அறிந்தேன். அப்படியான ஒரு கட்சி கொள்கைப் பற்றோடும் தீர்க்க தரிசனத்தோடும் கரும் மாற்ற வேண்டும்.
இவையெல்லாமே தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடம் இருக்கிறது. ஆதலால்தான் தொழிற்சங்கவாதியான நான் அதனோடு இணைந்து பணியாற்றுகிறேன். தமிழினம் இதை உணர்ந்து அதற்கு வாக்களித்து வலுவூட்ட வேண்டும் என்பது எனது வேண்டுகோள் என்றார்.