புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 பிப்., 2018

கிறீஸ் மனிதர் தாக்குதல் கோட்டபாய ராஜபக்ஷவின் திருவிளையாடல்; அமைச்சர் தயா கமகே!

கிறீஸ் மனிதர் தாக்குதல் கோட்டபாய ராஜபக்ஷவின் திருவிளையாடல் என அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.


கடந்த ஆட்சியின் போது கிறீஸ் மனிதன் உருவாக்கி சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுதினார்கள். கிறீஸ் மனிதனை பிடித்து பொலிஸில் கொடுத்தால் இராணுவத்தினர் வந்து அவர்கள் மனநோயாளிகள் என கொண்டு சென்றார்கள். இது அனைத்துமே கோட்டாபாய ரஜபக்ஷவின் திருவிளையாடல் என சிறு கைத்தொழில் அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைக்கு தளவாய் வட்டாரத்தில் போட்டியிடும் கணபதிப்பிள்ளை மோகனை ஆதரித்து செவ்வாய்கிழமை (06) மாலை செங்கலடி ரமேஸ்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இக்கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள் பலர் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு தெரிவித்து இணைந்துகொண்டனர்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், "உங்களது பிரதேசங்களில் பல கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டாலும் தமிழ் மக்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்கும் மக்கள் அதிகம் காணப்படுகிறார்கள். 30 ஆண்டுகள் நீங்கள் மிகவும் துயரப்பட்டீர்கள். கடந்த கால ஆட்சியாளரான மஹிந்த ராஜபக்ஷ எம்மையும், எமது குழந்தைகளையும், பிறக்கவிருக்கும் குழந்தைகளையும் கடனாளியாகக்கிவிட்டு சென்றுள்ளார்.

ஹம்பாந்தோட்டை சூரியவௌ கிரிக்கெட் மைதானம், துறைமுகம், கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சேலை அனைத்து இடங்களும் கடனுடன் தான் உள்ளது. இதிலே அரைவாசியை நாசம் செய்து மிகுதியை கொள்ளையடித்துள்ளார்கள. இவர்கள் கொள்ளையடித்த நிதியை நாங்களும் நீங்களும் இணைந்து வட்டியுடன் கட்ட வேண்டும்.

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்ற போது துப்பாகியால் சுட்டு கொலை செய்தார்கள். குடிநீருக்காக போராடிய மக்களை வெடிவைத்து துரத்துமாறு கோட்டாபாய ராஜபக்ஷ உத்தரவிட்டார். ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்டார், பிரதீப் எக்னலிகொட காணாமல் செய்யப்பட்டார். ரக்பி வீரர் தாஜூடீன் கொலை செய்யப்பாட்டார்.

சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை பயமூட்டுவதற்காக கிறீஸ் மனிதனை உருவாக்கினார்கள். கிறீஸ் மனிதனை பிடித்து பொலிஸில் கொடுத்தால் இராணுவத்தினர் வந்து அவர்கள் மனநோயாளிகள் என கொண்டு செல்கிறார்கள். இது அனைத்துமே கோட்டாபாய ரஜபக்ஷவின் திருவிளையாடல்.

செங்கலடி பிரதேசத்தைப் பொறுத்தவரை தொழில் வாய்ப்பை ஏற்படுத்துவதற்கான இடங்கள் உள்ள போதிலும் அதை நடைமுறைப்படுத்துவதற்கான பிரதிநிதிகள் இல்லை. இந்த பிரதேசம் கால் நடை வளர்ப்புக்கு உகந்ததாக காணப்படுகிறது. எனது அமைச்சின் ஊடக செங்கலடியிலுள்ள பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்க பசு மாடுகள் வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்படும். தமிழ் சமுதாயம் பசுக்களை பால் பெறுவதற்காகவே வளர்க்கின்றனர். இறைச்சியை சாப்பிடுவதற்கு அல்ல என்பது எமக்கு தெரியும். பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு ஆறு பசுக்களை வழங்க நினைத்திருக்கின்றோம். இதனுடாக ஐந்து இலட்சத்துக்கு மேல் வருமானம் பெறக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. மட்டக்களப்பு மாவட்ட மீனவர்களுக்கு நல்ல வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு நடவடிக்கையெடுக்கப்படும்." என தெரிவித்துள்ளார்.

ad

ad