7 பிப்., 2018

நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நேற்று இரவு நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூட்டத்தில் இரா.சம்பந்தன்

நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நேற்று இரவு நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூட்டத்தில் இரா.சம்பந்தன்யா
ழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் , எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனின் பாதுகாப்பு பல மடங்கு குறைக்கப்பட்டுள்ளது. நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நேற்று இரவு நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பரப்புரை கூட்டத்தில் இரா.சம்பந்தன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

குறித்த கூட்டத்தில் பாதுகாப்பு பலமடங்காக குறைக்கப்பட்டு இருந்தது. பத்துக்கும் குறைவான விசேட அதிரடிப்படையினரும் மிக குறைந்தளவான காவல்துறையினருமே பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர். கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. சில நாட்களுக்கு முன்னர் வன்னி மாவட்டங்களில் இடம்பெற்ற கூட்டமைப்பின் பரப்புரை கூட்டங்களில் பாதுகாப்பு அதிகரித்து காணப்பட்டு , கூட்டத்திற்கு வந்தவர்களும் கடும் உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அது தொடர்பிலான ஒளிப்படங்கள் ஊடகங்கள் , சமூக வலைத்தளங்களில் வெளிவந்து கடும் சர்ச்சையை கிளப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.