புதன், பிப்ரவரி 07, 2018

உதயங்கவைக் காப்பாற்ற முனையும் உக்ரேன்

டுபாய் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட, ரஷ்யாவுக்கான முன்னாள் சிறிலங்கா தூதுவர்வை, தம்மிடம் கையளிக்குமாறு உக்ரேனிய அதிகாரிகள், அபுதாபி அதிகாரிகளிடம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவுக்குச் செல்லும் வழியில் டுபாய் விமான நிலையத்தில் கடந்த 4ஆம் நாள் உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டார். அவர், டுபாய் விமான நிலைய குடிவரவு அதிகாரிகளால் ,அபுதாபி அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அபுதாபியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உதயங்க வீரதுங்கவை தமது நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு உக்ரேனிய அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உதயங்க வீததுங்க தமது நாட்டுக் குடியுரிமை பெற்றவர் என்ற வகையில் அவரைத் தமது நாட்டுக்கு அனுப்புமாறு உக்ரேனிய அதிகாரிகள் கோரியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது