03.04.2019 - புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் தேர்த்திருவிழா www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

ஞாயிறு, செப்டம்பர் 02, 2018

சுமந்திரனுக்கு எந்தளவு நெஞ்சழுத்தம்? - முதலமைச்சர்


ஐம்பதுக்கு ஐம்பது கோரி, சமஷ்டி கோரி, தனி நாடு கோரிவந்த தமிழருக்கு 13ம் திருத்தச் சட்டத்தை மட்டும் தந்தால் போதும் என்று அவர்கள் சார்பில் கூறுவதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எந்தளவு நெஞ்சழுத்தம் வேண்டும் என்று தெரிவித்துள்ளார்,வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்.

ஐம்பதுக்கு ஐம்பது கோரி, சமஷ்டி கோரி, தனி நாடு கோரிவந்த தமிழருக்கு 13ம் திருத்தச் சட்டத்தை மட்டும் தந்தால் போதும் என்று அவர்கள் சார்பில் கூறுவதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எந்தளவு நெஞ்சழுத்தம் வேண்டும் என்று தெரிவித்துள்ளார்,வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்.

மின்னஞ்சல் மூலமாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கான பதில்கள் என அவர் அனுப்பி வைத்துள்ள கேள்வி, பதில்களிலேயே குறித்த கருத்தை முன்வைத்துள்ளார்.

கேள்வி – சமஷ்டித் தீர்வு எமக்கு வேண்டாம் என்று காலியில் கௌரவ சுமந்திரன் கூறியுள்ளாரே? அது பற்றி?

பதில் - ஒரு வேளை 2015இல் அவர் தேர்தலில் நின்ற போது சமஷ்டி வேண்டாம் தூசி தட்டிய 13வது திருத்தச்சட்டம் மட்டும் போதும் என்று எமது மக்களிடம் கூறி வாக்குப் பெற்றாரோ தெரியவில்லை. அல்லது சிங்கள மக்களின் மனங்களைக் கொள்ளை கொள்ள வேண்டும் என்ற நினைப்பில் அவ்வாறு கூறினாரோ தெரியவில்லை. அல்லது காலியில் சிறப்பு அதிரடிப்படையினரின் பலமான பாதுகாப்பின் பின்னருந் தனக்கு அவுஸ்திரேலியாவில் கிடைத்தது போல் பாதிப்பான வரவேற்பு கிடைக்குமோ என்று பயந்து அவ்வாறு கூறினாரோ தெரியவில்லை.

நான் ஒன்பது மாகாணங்களுக்கும் சமஷ்டியே உகந்தது என்று சிங்கள மனங்களை மாற்றி வருகின்றேன். எனதினிய மாணாக்கர் தமிழ் மக்களுக்குத் தான் கொடுத்த வாக்குகளை மறந்து, வட கிழக்கில் கூட சமஷ்டி வேண்டாம் என்று கூறுகின்றார் என்றால் அதுவும் ஒற்றையாட்சியின் கீழ் சிங்கள மேலாதிக்கத்தை நிலை நிறுத்தியிருக்கும் 13வது திருத்தச்சட்டத்தைக் கோருகின்றார் என்றால் விரைவில் ஏதாவது பதவியொன்றை அவர் எதிர்பார்க்கின்றார் என்று அர்த்தம். அல்லது சிங்களவர்கள் மேலுள்ள பயமே காரணம் என்றும் நினைக்கலாம். அவரின் கருத்து அவரின் சுய கருத்தா அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தா என்பதை கூட்டமைப்பு தெளிவுபடுத்த வேண்டும். அவரின் கருத்து கூட்டமைப்பின் ஏகோபித்த கருத்தில்லை என்றால் ஒட்டுமொத்தம் அவர் போன்றவர்களை திரு. சம்பந்தனும் மற்றைய கட்சித் தலைவர்களும் சேர்ந்து கௌரவ அஸ்மின் கூறிய பாணியில் விரட்டி அடிக்க வேண்டும்!

ஐம்பதுக்கு ஐம்பது கோரி, சமஷ்டி கோரி, தனி நாடு கோரிவந்த தமிழருக்கு 13ம் திருத்தச் சட்டத்தை மட்டும் தந்தால்ப் போதும் என்று அவர்கள் சார்பில் கூறுவதற்கு எந்தளவு நெஞ்சழுத்தம் வேண்டும் அவருக்கு!