வடக்கில் படையினரிடமிருந்து 6009.95 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன என அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். மேலும் பிரதான நகரங்களில் உள்ள படையினரின் தலைமையகங்களை மாற்றுவதற்கு 866.71மில்லியன் ரூபா செலவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைக் காலங்களில் காழ்ப்புணர்வு கொண்ட சிலரினால் உண்மைக்குப் புறம்பான முறையில் எமது அமைச்சின் செயற்பாடுகள் விமர்சிக்கப்படுகின்றன. வீடமைப்பாக இருக்கட்டும், சேதமடைந்த வீடுகளைப் புனரமைப்புச் செய்வதாக இருக்கட்டும், சுகாதாரம், குடிநீர், மின்சாரம், உட்கட்டமைப்பு அத்துடன் அடிப்படை வசதிகளாக இருக்கட்டும் இவையனைத்தும் பல கோடி ரூபா நிதியீட்டில் கடந்த மூன்று வருடங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.