புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 செப்., 2018

சதுப்பு நிலத்தில் சிக்கி 5 யானைகள் மரணம்!

சோமாவதி தேசிய வனத்தில் 5 யானைகள் சேற்றில் சிக்கி உயிரிழந்த நிலையில், நேற்று வனஜீவராசிகள் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டன. மகாவலி ஆற்றின் பிரதான கிளையாறான பெரியாறு ஆற்றை அண்மித்த, பொலன்னவை- புதூர் பிரதேசத்திலுள்ள, சதுப்பு நிலமொன்றிலிருந்து இந்த யானைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இரவு நேரங்களில் உணவுக்காக வரும் யானைகள், இவ்வாறு சேற்றில் சிக்குண்டு, அதிலிருந்து வெளியே வரமுடியாமல் உயிரிழப்பதாகவும், வனஜீவராசிகள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த 5 யானைகளின் மரண பரிசோதனைகள், இன்றைய தினம் நடைபெறவுள்ளதாக, கிரிதலே வனஜீவராசிகள் பயிற்சி மத்திய நிலையத்தின் கால்நடை வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார் . இதேவேளை, கடந்த சில வாரங்களுக்கு முன்னர், இதேப் ​பிரதேசத்தில் சேற்றில் சிக்கிய நிலையில், உயிரிழந்திருந்த 8 வயது யானைக்குட்டியின் சடலம் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது

ad

ad