புலிகளின் தலைமைத்துவம் புத்திசாலித்தனமான தலைமைத்துவம் என்று கூறிய முதல் முஸ்லிமாக அஸ்மின் இருக்கக் கூடும் என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சரைப் பதவியில் இருந்து நீக்க புலிகளின் பாணியில் செயற்பட வேண்டும் என்று அஸ்மின் கூறிய கருத்து தொடர்பில் மின்னஞ்சல் மூலமாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அண்மையில் வட மாகாணசபையில் தான் பேசிய பேச்சுக்களைத் தொகுத்து ஒரு நூல் வெளியிடவிருப்பதாகக் கூறி, அவரின் நூலுக்கு முகவுரை எழுத வேண்டும் என்றால் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். தன்னுடைய கட்சியில் தனக்கு நேர்ந்தது எனக்கும் ஏற்பட வேண்டும் என்ற நட்பெண்ணத்தில் அவர் இதைக் கூறியிருக்கலாம்.அல்லது தனது இன மக்களுக்கு புலிகள் கையால் கிடைத்த பரிகாரத்தை நானும் பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அவர் அவ்வாறு கூறியிருக்கலாம் என்றும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.