புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜன., 2019

கூரே,போகல்லாகம வேண்டும்: மத வாத அமைப்புக்கள் போர்க்கொடி

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களது ஆளுநர்களை தொடர்ந்தும் அங்கு பணியிலமர்த்த தென்னிலங்கை சிங்கள மத அமைப்புக்கள் முற்பட்டுள்ளன.வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே மற்றும் கிழக்கு ஆளுநர் போகல்லாகம ஆகியோரை தொடர்ந்தும் அவ்வவ்மாகாணங்களில் தொடர்ந்தும சேவையாற்ற அவை கோரியுள்ளன.

இதன் மூலமே பௌத்தத்திற்கு முன்னுரிமை எனும் கருப்பொருளின் அடிப்படையில் திட்டங்களை வடகிழக்கில் முன்னெடுக்க முடியுமெனவும் அதற்கு தற்போது போன்று ஒத்துழைக்க கூடிய ஆளுநர்கள் தேவையென வலியுறுத்தியுள்ளனர்.

இதனிடையே அனைத்து மாகாண ஆளுநர்களும் தங்களது பதவி விலகளுக்கான கடிதங்களை, தான் உட்பட ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.



இதனிடையே வடமாகாண ஆளுநரின் பேரில் நடந்ததாக கூறப்படும் பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் மைத்திரியின் கவனத்திற்கு வந்துள்ளதாக புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.

ad

ad