புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜன., 2019

சபரிமலையில் இரு இளம்பெண்கள் ஐயப்பனைத் தரிசனம் செய்தனர்

சபரிமலையில் இன்று அதிகாலையில் 40 வயதுகளில் உள்ள இரு இளம்பெண்கள் காவல்துறையினரின்
பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்து திரும்பினர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த போதும் இந்தத் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்து அமைப்புகள், பாஜகவினர் கடும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் திருநங்கைகள் 4 பேர் சபரிமலைக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய முயன்றபோது காவல்துறையினரால் தடுக்கப்பட்ட போதும் பின்னர் உயர் நீதிமன்ற குழுவினர் முறையிட்டதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் திருநங்கைகள் 4 பேரும் சாமி தரிசனம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, சென்னையைச் சேர்ந்த 50 வயதுக்குட்பட்ட பெண்கள் 11 பேர் சபரிமலைக்கு நேற்று சென்ற போதும் அவர்கள் பக்தர்களின் கடும் எதிர்ப்பால் அவர்கள் திரும்பியிருந்தார்கள். இந்த நிலையில் இன்று அதிகாலை இரு பெண்கள் அதிகாலை சபரிமலைக்கு காவல்துறையின் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்துள்ளனர்.
சபரிமலையில் அனைத்துப் பக்தர்களும் செல்லும் 18 படிகள் வழியாகச் செல்லாமல், பின்புறம் உள்ள பகுதியினூடாக சென்று அவர்கள் வழிபட்டு விட்டு திரும்பியுள்ளனர். இதேவேளை சபரிமலையில் உள்ள பாரம்பரிய வழிபாட்டு விதிமுறைகளை மீறி, பெண்கள் சாமி தரிசனம் செய்ததாக தெரிவித்து சன்னிதானம் மூடப்பட்டுள்ளதுகோவிலை சுத்தம் செய்து பரிகார பூஜை செய்த பிறகு நடை திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சபரிமலையில் பிந்து, கனகதுர்கா: ஐயப்பனை தரிசிக்க இரு பெண்கள் சென்றது எப்படி?
சபரிமலைபடத்தின் காப்புரிமை Getty Images
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று அதிகாலை 50 வயதுக்குட்பட்ட இரண்டு பெண்கள் தரிசனம் செய்த நிலையில் கோயில் நடை சிறிது நேரம் சாத்தப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது.
இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை சுமார் 03:45 மணியளவில் போலீஸ் பாதுகாப்புடன் சந்நிதானத்தை அடைந்த பிந்து, கனகதுர்கா என்ற இந்த இரண்டு பெண்களும் பதினெட்டாம் படி வழியாக செல்லாமல் வி.ஐ.பி.க்கள் செல்லும் நுழைவாயில் வழியாக சென்று சுவாமி தரிசனம் செய்ததாக அந்த செய்திகள் கூறுகின்றன.
இந்த இரு பெண்களும் கேரளாவை சேர்ந்தவர்கள். இந்த பெண்கள் ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் ஐயப்பனை தரிசிக்க சபரிமலை வந்திருந்தனர். பாஜக ஆதரவு போராட்டக்காரர்களின் எதிர்ப்பு காரணமாக அப்போது இவர்கள் திருப்பியனுப்பட்டனர்.
பிந்துவின் வயது 40. கனகதுர்காவின் வயது 39.
இரு பெண்கள் சபரிமலைக்குள் சென்றதாக ஒளிபரப்பகும் காட்சி.படத்தின் காப்புரிமை Twitter
சமூக ஊடகங்களில், ஐயப்பன் கோயில் கருவறையை கருப்பு உடையணிந்த இருபெண்கள் சுற்றி வருவது போன்ற காட்சிகள் வைரலாகி வருகின்றன.
இந்தக் காட்சிகள், பிந்து, கனகதுர்கா தரிசனம் செய்யச் சென்ற காட்சிகளா என்பதை பிபிசியால் உறுதி செய்ய முடியவில்லை.
இந்த இரு பெண்களும் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்ததை கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதி செய்ததாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

ad

ad