புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜன., 2019

ஐ ரி ன் (ITN)தொலைக்காட்சியில் மூன்று வருடத்தினுள் 677 கோடி ஊழல்?

கொழும்பில் இயங்கிவரும் அரச நிறுவனம் ஒன்றிற்குள் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதுடன் குறித்த நிறுவனத்திற்குள் நடைபெற்ற நியமனங்கள் அனைத்திலும் அரசியல் தலையீடுகள் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.
நிறுவனத்தின் நிலையான வைப்பிலிருந்த 677 கோடி ரூபா, கடந்த 3 வருடங்களுக்குள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக, அண்மையில்
ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியதாக, சுயாதீனத் தொலைக்காட்சி ஊழியர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இது குறித்து இன்று சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் (ITN) முன்னாள் தலைவர் அநுர சிறிவர்தன, பாரிய நிதி மோசடி விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜரானார்.
சுயாதீன தொலைக்காட்சி சேவை நிறுவனத்திற்கு ஏற்பட்ட 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிக இழப்பு தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்காக அநுர சிறிவர்தனவுக்கு இன்று அழைப்பு விடுத்ததாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்தது.
இதேநேரம் சுயாதீனத் தொலைக்காட்சி சேவையின் ஊழியர்கள் சிலர் மூன்றாவது நாளாக இன்றும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
சுயாதீனத் தொலைக்காட்சி சேவையின் ஊழியர்கள் மூன்றாவது நாளாகவும் இன்று காலை ஆரம்பித்த எதிர்ப்பு நடவடிக்கை மாலை வரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் உயர்மட்ட முகாமைத்துவத்தில் மேற்கொள்ளப்படும் அரசியல் நியமனங்கள் மற்றும் கடந்த காலத்தில் நிறுவனத்திற்குள் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி மோசடிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஊழியர்கள் தொடர்ந்தும் எதிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, இந்த எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பில் 13 ஊழியர்களின் சேவையை இடைநிறுத்த, கட்டுப்பாட்டு சபை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் கூறியுள்ளனர்.
குறித்த நிறுவனத்தை பிரபல அமைச்சர் ஒருவருக்கு விற்பனை செய்ய முயற்சிகள் இடம்பெறுவதாக கடந்த வருடம் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இவ்வாறான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதுரின் தொலைக்காட்சியில் மூன்று வருடத்தினுள் 677 கோடி ஊழல்?

கொழும்பில் இயங்கிவரும் அரச நிறுவனம் ஒன்றிற்குள் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதுடன் குறித்த நிறுவனத்திற்குள் நடைபெற்ற நியமனங்கள் அனைத்திலும் அரசியல் தலையீடுகள் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.
நிறுவனத்தின் நிலையான வைப்பிலிருந்த 677 கோடி ரூபா, கடந்த 3 வருடங்களுக்குள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக, அண்மையில்
ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியதாக, சுயாதீனத் தொலைக்காட்சி ஊழியர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இது குறித்து இன்று சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் (ITN) முன்னாள் தலைவர் அநுர சிறிவர்தன, பாரிய நிதி மோசடி விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜரானார்.
சுயாதீன தொலைக்காட்சி சேவை நிறுவனத்திற்கு ஏற்பட்ட 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிக இழப்பு தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்காக அநுர சிறிவர்தனவுக்கு இன்று அழைப்பு விடுத்ததாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்தது.
இதேநேரம் சுயாதீனத் தொலைக்காட்சி சேவையின் ஊழியர்கள் சிலர் மூன்றாவது நாளாக இன்றும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
சுயாதீனத் தொலைக்காட்சி சேவையின் ஊழியர்கள் மூன்றாவது நாளாகவும் இன்று காலை ஆரம்பித்த எதிர்ப்பு நடவடிக்கை மாலை வரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் உயர்மட்ட முகாமைத்துவத்தில் மேற்கொள்ளப்படும் அரசியல் நியமனங்கள் மற்றும் கடந்த காலத்தில் நிறுவனத்திற்குள் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி மோசடிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஊழியர்கள் தொடர்ந்தும் எதிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிறுவனத்தின் நிலையான வைப்பிலிருந்த 677 கோடி ரூபா, கடந்த 3 வருடங்களுக்குள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக, அண்மையில்
ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியதாக, சுயாதீனத் தொலைக்காட்சி ஊழியர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இதேவேளை, இந்த எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பில் 13 ஊழியர்களின் சேவையை இடைநிறுத்த, கட்டுப்பாட்டு சபை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் கூறியுள்ளனர்.
குறித்த நிறுவனத்தை பிரபல அமைச்சர் ஒருவருக்கு விற்பனை செய்ய முயற்சிகள் இடம்பெறுவதாக கடந்த வருடம் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இவ்வாறான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

ad

ad