வியாழன், பிப்ரவரி 28, 2019

மனைவி நித்யாவால் குழந்தையின் எதிர்காலம் பாழாகிறது - நடிகர் தாடி பாலாஜி குற்றச்சாட்டு


நடிகர் தாடி பாலாஜியும், அவரது மனைவி நித்யாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.

தனியார் டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்களை நடிகர் கமல்ஹாசன் சேர்த்து வைத்தார். சில மாதங்கள் அவர்கள் சேர்ந்து வாழ்ந்தனர். தற்போது மீண்டும் தாடி பாலாஜிக்கும், அவரது மனைவி நித்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

இந்தநிலையில் தாடி பாலாஜி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

என் மனைவி நித்யா போலீஸ்காரர் ஒருவருடன் சேர்ந்து தனது குழந்தையின் வாழ்க்கையை சீரழிக்கிறார்.

தன் மன உளைச்சலுக்கு போலீஸ்காரர் தான் காரணம். ஏற்கனவே அவர் மீது கொடுத்த புகாருக்கு பழிவாங்க இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். போலீசார் இந்த விவகாரத்தில் முறையாக விசாரணை நடத்தவில்லை. போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.தன்னுடைய குடும்பம் ஒன்று சேர வேண்டும் என தனியார் டிவிக்கு எந்த நோக்கமும் இல்லை.

நித்யா டிவி நிகழ்ச்சியில் நடந்து கொண்டது அனைத்துமே நடிப்பு. டிவி நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னர் என்னுடைய அம்மா வீட்டிற்கு தான் சென்றேன். நித்யாவை பார்க்க செல்லவே இல்லை. என் குழந்தையை பார்க்க விடவில்லை. பணத் தேவைக்காக மட்டுமே நித்யா பேசினார்.

தன் குழந்தைக்கு என்ன தேவையோ அதை ஒரு தந்தையாக செய்ய நான் தயாராக இருக்கிறேன், தன் குழந்தைக்கு (போஷிகா) நித்யா மற்றும் போலீஸ்காரரால் ஆபத்து உள்ளது.

நடிகர் கமல் குழந்தையின் படிப்பை கவனிக்க சொல்லி அறிவுரை கூறினார். போர்டிங் பள்ளியில் சேர்க்கும் பட்சத்தில் குழந்தையின் படிப்பு செலவு முழுவதையும் ஏற்க தயார்.

நான் நித்யாவிற்கு கொடுத்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி உள்ளார். நித்யா ஜிம் பயிற்சியாளர் மற்றும் போலீ