புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 பிப்., 2019

விடுதலைப்புலிகள் என்ற தீக்குள்ளிருந்து வந்தவன் நான்;எனக்கு யாரும் அரசியல் கற்பிக்க வேண்டாம்

விடுதலைப்புலிகள் என்ற தீக்குள்ளிருந்து வந்தவன் தான் என்றும், தனக்கு யாரும் அரசியல்
கற்பிக்க வேண்டாமென்றும் வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.


கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற யாழ்.மாநகர சபை அமர்வில் சீ.வி.கே.சிவஞானம் ஆணையாளராக இருந்தபோது, ஊழல் இடம்பெற்றதாகவும், அத்துமீறிய நியமனங்கள் வழங்கியதாகவும் முன்னாள் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா குற்றஞ்சாட்டியிருந்தார்.
அவரின் குற்றச்சாட்டு தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று, யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உள்ள அவரது வீட்டில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “என்னைப் பற்றித் தீர்மானிக்க வேண்டியவர்கள் இந்த ஊழல்வாதிகள் அல்ல.
தீர்மானிக்க வேண்டியவர்கள் எனது மக்கள். எந்தக்காலத்தில் என்ன செய்தேன் என்று தீர்ப்பளிக்க வேண்டியது மக்களே. அந்த மக்கள் தீர்ப்பையே நான் வரவேற்கின்றேன்.
1979 ஆம் ஆண்டிலிருந்து, தீக்குள்ளேயே வாழ்ந்தவன் நான். என்னில் ஒரு தவறு இருந்திருந்தால், எப்பவோ முடிக்கப்பட்டிருப்பேன்.
அரசியல் தெரியாதவன் நான் அல்ல. எனக்கு எவரும் அரசியல் கற்பிக்க தேவையில்லை. ஆனால் உண்மையை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

ad

ad