புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 அக்., 2012


ஐ. நா என்கிற கொத்தனக்காரன்.
"இலங்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை குறித்த அறிக்கையை ஐநா மறைக்கிறதா?!-இன்னர் சிற்றி பிரஸ்"

இலங்கையில் இறுதிப் போரில் அரச படையினரால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட போது, ஐ.நாவின் செயற்பாடுகள் தொடர்பாக, ஆராய நியமிக்கப்பட்ட தனி நப
ர் விசாரணைக் குழுவின் அறிக்கை, ஐ.நாவினால் மறைக்கப்பட்டு விட்டதாக இன்னர் சிற்றி பிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

கருணா எப்படி பாதுகாக்கப்படுகிறார் விக்கி லீக்ஸ் தகவல் !ATHIRVU
இலங்கையில் இருந்து வெளியாகும் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர்களில் ஒருவரான பிரற்றிக்கா சமீபத்தில், அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்ற செய்தி பலராலும் அறியப்பட்ட விடையம். கோத்தபாயவின் மனைவிக்கு நாய் குட்டி ஒன்றை சுவிஸ் நாட்டில் இருந்து இறக்குமதிசெய்ய கோத்தபாய ஆடிய நாடகத்தை பிரற்றிக்கா

கே.பியின் திரைமறைவுக் கும்பல்.... பெயர்கள் அம்பலம் [KP's cabal group] -athirvu webs

இரகசிய ஈமெயில் ஒன்று அம்பலமானதால், பல விடையங்கள் வெளியாகியுள்ளதாக ஆங்கிலப் ஊடகமான கார்டியன் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் சில புலம்பெயர் தமிழர்களை அழைத்து தாம் சமரசம் பேசவிருப்பதாக இலங்கை அரசு அறிவித்தது.

27 அக்., 2012

தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க.வுக்கு போகவில்லை: விஜயகாந்த்
தமிழகத்தில் மின் உற்பத்தி திட்டங்களுக்காக முதல்வர் ஜெயலலிதா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது விஜயகாந்த் இவ்வாறு
அரையிறுதிக்கு முன்னேறினார் சாய்னா-பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டனில்
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் : அரையிறுதிக்கு முன்னேறினார் சாய்னா

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில், இந்திய வீராங்கனை சாய்னா நேவால், தாய்லாந்து வீராங்கனை ரட்சனோக்கை எதிர்கொண்டார். துவக்க்ததில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய்னா, 11-7 முன்னிலையில் இருந்தார். அதன்பின்னர்  ரட்சனோக் ஆக்ரோஷமாக ஆடி புள்ளிகளை பெற்றார்.

கனடாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் அவமதிப்பு
கனடாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் அவமதிப்புபாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் தற்போது இவர் தெக்ரிக் - இ- இன்சாப் என்ற அரசியல் கட்சியை நடத்தி வருகிறார். அக்கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். இவர் கனடா தலைநகர் டொரண்டோவில் இருந்து நியூயார்க் நகருக்கு விமானத்தில் புறப்பட்டார் தனது கட்சி வளர்ச்சி நிதி திரட்ட லாங் ஐலேண்ட்சிட்டி
அரை இறுதியில் வெற்றி பெற்ற லயன்ஸ் அணியும் சிட்னி சிக்சர்ஸ் அணியும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.
தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது. அரை இறுதி போட்டிகள் முடிவடைந்த நிலையில் இறுதிப் போட்டியில் மோதும் அணிகள் எது என்பது தெரிந்து விட்டது. 
நான் தனி ஆளாக நின்று சமாளிப்பேன் :28 பேரும் ஓடினாலும் பரவாயில்லை; விஜயகாந்த் பரபரப்பு பேச்சு
மதுரை கோரிப்பாளையத்தில் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் பக்ரீத் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் இலவசமாக ஆயிரம் பேருக்கு ஆட்டுக்கறி  வழங்கப்பட்டது.

பாதியில் நின்றுபோன விஜயகாந்த் நிகழ்ச்சி
மதுரை கோரிப்பாளையத்தில் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் பக்ரீத் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் இலவசமாக ஆயிரம் பேருக்கு ஆட்டுக்கறி வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் பேச்சாளர்கள் பேசி முடித்து, விஜயகாந்த் பேச ஆரம்பித்ததும் மழை பெய்தது.  பேச்சை பாதியில் முடித்துக்கொண்டார்.

விஜயகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும்: பத்திரிக்கையாளர் மன்றம்
தேமுதிக எம்.எல்.ஏக்கள் அதிமுக விரித்த வலையில் சிக்கியபடி உள்ளனர். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பும், தேமுதிக வட்டாரத்தில் சலசலப்பும் ஏற்பட்டது.

திருமாவளவனுக்கு 90 சவரன் பரிசளிப்பு
கிருஷ்ணகிரி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சி தலைவர் தொல். திருமாவளவனுக்கு தங்க காசுகள் வழங்கும் விழா கிருஷ்ணகிரியில் நேற்று நடந்தது. விழாவிற்கு மாநில வணிகரணி துணை செயலாளர் கனியமுதன் தலைமை வகித்தார்

கும்பகோணம்: கோவில் யானை ஊழியரை தாக்கி கொன்றது 

கும்கோணம் அருகே உள்ள ஆடுதுறை புதூரைச் சேர்ந்தவர் சேகர். இவர் திருவிடைமருதூரில் உள்ள திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மகாலிங்க சுவாமி கோவிலில் பணியாளராக

நடிகர் விஜய் 15 ஏழை பெண்களுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கிறார் 
ஓசூர் நகர, ஒன்றிய தலைமை இளைய தளபதி விஜய் நற்பணி இயக்கம் சார்பில், 15-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, 15 ஏழைப்பெண்களுக்கு, நாளை (27-ம்தேதி) இலவச திருமணம் நடைபெறுகிறது.

அநுராதபுரத்தில் பெருநாள் தினத்தில் பள்ளிவாசல் தீக்கிரை
அநுராதபுரம் மல்வத்து ஓய சிங்க கனுவ பகுதியில் அமைந்துள்ள தக்கியா பள்ளிவாசல் முஸ்லிம்களின் பெருநாள் தினமான இன்று அதிகாலை 2.30 மணியளவில் இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
 

முஸ்லிம்களின் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த வேளையில் இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்காரணமாக தக்கியா பள்ளிவாசலுக்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா
இளைஞர்கள் பதவியேற்க இது சரியான நேரம் : எஸ்.எம். கிருஷ்ணா
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,இளைஞர்களுக்கு வழிவிடுவதற்காகவே
தேமுதிக எம்.எல்.ஏக்கள் :விஜயகாந்த் ஆவேசம்
அதிமுக விரித்த வலையில் விழுந்துகொண்டேயிருக்கும்

தேமுதிக எம்.எல்.ஏக்கள் அதிமுக விரித்த வலையில் சிக்கியபடி உள்ளனர்.

மதுரை மத்திய தொகுதி தேமுதிக எம்எல்ஏ சுந்தர்ராஜன், திட்டக்குடி எம்எல்ஏ தமிழழகன்
ஜெயலலிதாவுடன் சந்திப்பு-பரபரப்பு : மேலும் 2 விஜயகாந்த் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் 


மதுரை மத்திய தொகுதி தேமுதிக எம்எல்ஏ சுந்தர்ராஜன், திட்டக்குடி எம்எல்ஏ தமிழழகன் ஆகியோர் தமிழக முதல் அமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவை நேற்று (26/10/2012) காலை சந்தித்தனர்.

தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஈழத்தமிழர் பற்றி முடிவு?
இன்று மதியம் தொடங்கிய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக அ.தி.மு.க. வட்டாரங்களில் கூறப்படுகிறது.

டெசோ தீர்மானங்கள் பான் கீ மூனிடம் கையளிக்கப்படவுள்ளன

டெசோ மாநாட்டு தீர்மானங்களை தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க. நாடாளுமன்ற தலைவர் டி.ஆர். பாலு ஆகியோர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கையளிக்கவுள்ளதாக

பாடகி சின்மயி விவகாரத்தில் திடீர் திருப்பம்! சின்மயி மீதும் போலீஸில் புகார்!!


ஏற்கனவே மீடியாவிலும், சமூக இணையதளங்களிலும் பரபரப்பாக அடிபட்டுக் கொண்டுள்ள பாடகி சின்மயி விவகாரத்தில், அடுத்த திருப்பம். பாடகி சின்மயி மீது, சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமூகங்களுக்கு இடையே பகையுணர்வை ஏற்படுத்துகிறார் என்பது புகார்.

ad

ad