புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 அக்., 2012


டெசோ தீர்மானங்கள் பான் கீ மூனிடம் கையளிக்கப்படவுள்ளன

டெசோ மாநாட்டு தீர்மானங்களை தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க. நாடாளுமன்ற தலைவர் டி.ஆர். பாலு ஆகியோர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கையளிக்கவுள்ளதாக
தி.மு.க. அலுவலகம் அறிவித்துள்ளது.
சென்னையில் கடந்த ஆகஸ்ட் மாதம் தி.மு.க. வினரால் நடத்தப்பட்ட டெசோ மாநாட்டில் இலங்கைத்தமிழர்களின் மறுவாழ்வு, அரசியல் அதிகாரம் மற்றும் சமவுரிமை உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன்போது இத்தீர்மானங்கள் மீது இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஐ.நா. சபைக்கு செல்வோம் என்று தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி அறிவித்திருந்தார்.
எனவே, தீர்மானங்களை கையளிக்க ஐ.நா. நிர்வாகத்திடம் தி.மு.க. திகதி கேட்டிருந்தது. இந் நிலையில் இரண்டரை மாத இடைவெளியின் பின்னர் இதற்கான அனுமதி கிடைத்தது.
இதையடுத்து டெசோ தீர்மானங்களுடன் தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க. நாடாளுமன்றத் தலைவர் டி.ஆர். பாலு ஆகியோர் எதிர்வரும் 30ஆம் திகதி நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. சபைக்கு சென்று சபையின் தலைமையலுவலகத்திலும் ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் ஆணையகத்திலும் கையளிக்கவுள்ளனர் என அறிவித்துள்ளது

ad

ad