கருணா எப்படி பாதுகாக்கப்படுகிறார் விக்கி லீக்ஸ் தகவல் !ATHIRVU
ஆனால் தற்போது அதனை ஒப்புக்கொள்ளும் அவர் கருணாவை கோத்துவிட்டுள்ளார். அதாவது பிரற்றிக்கா கருணாவைப் பற்றி அடிக்கடி செய்தி வெளியிட்டு வந்துள்ளாராம். எனவே கருணா அவர் மீது ஆத்திரமடைந்துள்ளார் என்று தெரிவிக்கவே தான் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாக கோத்தபாய தற்போது தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது. தான் பிரற்றிக்காவை திட்டவில்லை என்றும், தாக் கருணா குறித்து பேசவே அவருக்கு தொலைபேசி அழைப்பை விடுத்ததாகவும் கோத்தபாய தெரிவித்துள்ளார். அப்படி என்றால் கருணா சாதுவாக கோபப்பட்டால் கூட கோத்தபாயவால் தாங்கமுடியவில்லை என்றால் பாருங்களேன்.
டக்ளசை மகிந்தர் பாதுகாப்பது போல, கருணாவின் காவல் தெய்வமாக விளங்குவது கோத்தபாய தான் என்பது தற்போது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது. 2007ம் ஆண்டு அமெரிக்க தூதுவர் ரிச்சாட் பவுச்சர் கோத்தபாயவைச் சந்தித்தபின்னர், அமெரிக்க தூதுவராலயம் சென்று சில தகவல்களைத் தெரிவித்துள்ளார். இதில் கோத்தபாயவின் கட்டுப்பாட்டில் தான் கருணா இயங்கிவருவதாக தாம் சந்தேகிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். சமாதான காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியினரே கருணாவை புலிகள் இயக்கத்தில் இருந்து பிரித்தனர் என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது. ஆனால் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்த கருணா உடனடியாகவே கோத்தபாயவுடன் இணைந்துவிட்டார். இதன் அடிப்படையில், கருணா யாருடன் இணைந்து இயங்குகிறார் என்பதனை அமெரிக்க தூதரம் கண்டு பிடித்து, தமது தலைமைக்கு 2007ம் ஆண்டே அறிவித்துள்ளது.
பாதுகாப்பாக அனுப்பப்பட்ட இச் செய்தியை, விக்கி லீக்ஸ் ஊடறுத்துப் பெற்று, பின்னர் அதனை தங்கள் தளத்தில் தரவேற்றியுள்ளனர். விக்கி லீக்ஸ்சின் தரவுத் தளத்தில் இருந்து அதிர்வு இணையம் இத் தகவல்களைப் பெற்றுள்ளது.
A Leaked “CONFIDENTIAL” US diplomatic cable, dated May 15, 2007, recounts the details of a meeting the US Assistant Secretary for South and Central Asian Affairs Richard Boucher has had with Secretary to the Ministry of Defence Gothabaya Rajapaksa in Colombo on May 10, 2007.