புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 நவ., 2012


மீண்டுமொரு தடவை சர்வதேச அரங்கொன்றில் அம்பலப்பட்டு நிற்கும் இலங்கை அரசு
அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா போன்ற சர்வதேச அரசியலின் முக்கிய விசையாகவுள்ள மேற்குலக நாடுகள், சிறிலங்காவின் வாக்குறுதிகளை நம்புவதற்கு இனியும் தாங்கள் தயாரில்லை என்ற நிலைப்பாட்டினை வெளிக்காட்டியுள்ளமை ஓருபுறமிருக்க, மறுபுறம் சிறிலங்காவின் செயற்பாடுகளுக்கு புகழ்மாலை சூட்டாது, இறுக்கமான நிலைப்பாட்டினை இந்தியா இம்முறை சபையில் வெளிப்படுத்தியுள்ளமை பலராலும் கவனிக்கப்பட்டுள்ளது. 

நஞ்சுக்கொடி அறுந்ததால் தாயும் குழந்தையும் மரணம்: துணுக்காயில் சம்பவம
முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தைச் சேர்ந்த தாய் ஒருவரை குழந்தையைப் பிரசவிப்பதற்காக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை நஞ்சுக்கொடி அறுந்தமையால் தாயும் குழந்தையும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர்- ஓயாத ஆரவாரமும் சர்ச்சையும்


சிவராத்திரியல்ல.. ஏகாதசியல்ல.. இரவு நேர கிரிக்கெட் போட்டியும் அல்ல.. ஆனாலும் அக்டோபர் 26 வெள்ளிக்கிழமையன்று தமிழகத்தின் பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினர் கொட்டக் கொட்ட விழித்திருந்து அந்த டி.வி. நிகழ்ச்சியை ரசித்துக்கொண்டிருந்தார்கள். நேரடி ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது சென்னை நேரு உள்விளையாட் டரங்கத்தில். அங்கும் பல்லாயிரக்கணக்கானோர் நள்ளிரவு கடந்தும் உற்சாகக் குரல் எழுப்பியபடியே இருந்தார்கள். அத்தனையும் விஜய் டி.வியின் ஜூனியர் சூப்பர் சிங்கர் 3 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி ஏற்படுத்திய தாக்கம்தான்.
ஐ.நா.‌துணைப்பொதுச் செயலரிடம் டெசோ மாநாட்டு தீர்மான நகல்களை ஒப்படைத்தார் ஸ்டாலின் 
சென்னையில் கடந்த ஆக.12-ம் தேதி  தி.மு.க. சார்பில் கலைஞர் ‌த‌லைமையில் நடந்த டெசோ மாநாடு நடந்தது. இதில் இலங்கை தமிழர் பிரச்னை குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் தீர்மான நகல்கள் ஐ.நா.பொதுச்செயலரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. 


வேண்டாய்யா வேட்டி! எடுய்யா பேண்டை! சட்டசபைக்கு ஸ்டைலாக வந்த எம்.எல்.ஏ., 

மதுரை மத்திய தொகுதி தேமுதிக எம்எல்ஏ சுந்தர்ராஜன், திட்டக்குடி தேமுதிக எம்எல்ஏ தமிழழகன் ஆகியோர் முதல் அமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு தேமுதிக தலைமைக்கு அதிர்ச்சியை தந்தது. தொடர்ந்து மேலும் இரண்டு எம்எல்ஏக்கள் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர்.

தமிழர்களின் மறுவாழ்வு திட்டங்களுக்கு இலங்கை ஒப்புதல் : ஜெனீவா கூட்டத்தில் சமரசிங்கே

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும், அப்போது நடந்த படுகொலைகள் மற்றும் காணாமல் போனவர்கள் பற்றி இலங்கை அதிபர் ராஜபக்சே விசாரணை நடத்த தவறியதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது.



           து, ஒருநாளில் நடந்த திடீர் நிகழ்வல்ல என்கிறது அ.தி.மு.க. மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் வட்டாரம். விரிவாக விசாரித்தோம்.

1 நவ., 2012

பார்வைகள் குறும்பட வெளியிட்டு விழாவில் சிறந்த ஒளிபதிவிற்காக தீவகம் வேலணையைச் சேர்ந்த பிரியந்தன் (starmedia இன் இயக்குனர்) என்பவருக்கு வவுனியா வலயக்கல்வி பணிமனை விருது 
வடமாகாணத்தில் நடைபெற்ற மனநலதினத்தை முன்னிட்டு குறும்படபோட்டியில் வெற்றிபெற்ற  பார்வைகள் குறும்பட வெளியிட்டு விழாவில் சிறந்த ஒளிபதிவிற்காக

நயினாதீவு பெருங்குளம் மதுரை மீனாட்சி அம்மன் , ஆலய திருப்பணி வேலைகள் ,யாவும் ஆரம்பமாகி நடைபெற்று கொண்டிருக்கின்றன
இத் திருப்பணி வேலைகளுக்காக ,புலம் பெயர்ந்து வாழும் எமது ஊர் உறவுகள் தங்கள் பங்களிப்பை வழங்கி வருவதாக அறிய முடிகின்றது .இப் பெரும் திருப்பணிக்கு தங்களால் வழங்குகின்ற பேருதவியை .முன்னிட்டு .அனைத்து உறவுகளுக்கும் .எமது அன்புகலந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம் .. நன்றியுடன் . ஆலய அறங்காவலர்களும்


அனலைதீவு இந்து மயானம் புனரமைக்கப்பட்டுள்ளது.  22-7-2012 அன்று ஆரம்பிக்கப்பட்ட வேலைகள் தற்போது நிறைவடைந்துள்ளது. இப்பணிகளை அனலைதீவு கலாச்சார ஒன்றியம் கனடா திறம்பட நடாத்தி முடித்திருக்கிறது. அத்துடன் ஊரின் வளர்ச்சிக்கு இவ் ஒன்றியம் மகத்தான சேவையை வழங்கிவருது குறிப்பிடத்தக்கது. (படங்கள் )

மண்டைதீவுப் பிரதேசத்திற்கு விரைவில் மின்சாரம் விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் மிகவும் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.
வடக்கின் வசந்தம் அபிவிருத்தி திட்டத்தின் கீழ்  இப்பகுதிக்கு மின்சாரம்
விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் ஒரு கட்டமாக மின்கம்பங்கள் நடப்பெற்று மின்கம்பிகள்
பொருத்தும் பணிகள் நடைபெற்றுவருகின்றது.
 2013 ஆண்டு பங்குனி மாதம் மட்டில் குறிகட்டுவான் நயினாதீவுக்கான பாதை சேவை ஆரம்பிக்கப்படலாம் என எதிர்பாக்க படுகின்றது . நிர்மானபணிகள் .இரு இடங்களிலும் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று கொண்டிருக்கின்றது .
தண்ணீர்ப் போத்தலால் சிறீதரனைத் தாக்க முயற்சித்தார் சந்திரகுமார்; ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் சம்பவம்
ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கும் ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற உறுப்பினரான சந்திரகுமாருக்கும் இடையில் காரசாரமான விவாதத்தினையடுத்து தண்ணீர்ப் போத்தலால் சிறீதரனைத் தாக்க முயற்சித்தார் சந்திரகுமார்.பதிலுக்கு சிறீதரன் உங்களிடம் மட்டுமா தண்ணீர் போத்தல் இருக்கிறது நீர் தாக்கினால் நாங்களும் தாக்குவோம் என அவர் பதிலளித்தார். 

ஐ.நா.வில் இலங்கையின் நியாயங்களை வெளிப்படுத்தும் தூதுக்குழு : (நேரலை ஒளிபரப்ப
ஜெனீவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரைவையின் அனைத்துல ஆவர்த்தன பரிசீலனையில் இலங்கை தற்போது தன்பக்க கருத்துக்களை முன்வைத்து கொண்டிருக்கின்றது. 

முன்னாள் பெண் போராளியின் பேட்டி கவலை தருகின்றது!- பா.உறுப்பினர் சி.சிறீதரன்
கொடுக்கும் பதிலடி .நன்றி 
ஆனந்த விகடனில் வெளியாகிய “நேற்று நான் விடுதலைப் போராளி இன்று நான் ஒரு பாலியல் தொழிலாளி’’ என்ற தலைப்பில் தமிழ்வின் இணையத்தளத்தில் வந்திருக்கும் முன்னாள் போராளியின் பேட்டியை வாசித்து நாம் கவலை அடைந்துள்ளோம்.
விடுதலைப்புலிகளில் அனுபவம் மிக்க படையில் இருந்த ஒரு முதல்நிலையில் இருக்கக்கூடிய போராளி தன் துன்பங்களையோ கஸ்டங்களையோ இங்கு இருக்கக்கூடிய பா.உறுப்பினர்களிடமோ
விகடனில் வந்த இந்த கட்டுரையை முழுதாக பிரசுரிக்க எமக்கு விருப்பம் இல்லை.இணையத்தை பார்வையிடுவோர் தொகை கூடும் என்பதற்காக இந்த விபசாரத்தை நாங்கள் செய்ய விரும்பவில்லை    நன்றி
 விகடன் 
நேற்று நான் விடுதலைப் போராளி! இன்று பாலியல் தொழிலாளி! - ஒரு பெண் புலியின் வாக்குமூலம்! இது உண்மைக் கதை

வித்யா ராணி... 2009 மே வரை தமிழ் ஈழம் போற்றிய ஒரு பெண் போராளி. ஆனையிறவு முகாம் மீதான தாக்குதல் தொடங்கி 'ஜெயசிக்குறு எதிர் சமர்’ என ஈழத்தின் பெரும் சமர்களிலும் பங்கெடுத்தவர்.

தமிழகத்தையே உலுக்கிய கோவை குழந்தைகள் கொலை வழக்கு! குற்றவாளிக்கு தூக்கு! கோவை கோர்ட் தீர்ப்பு!


கோவை, ரங்கேகவுடர் வீதி, சித்தி விநாயகர் கோவில் வீதி அருகிலுள்ள காத்தான் செட்டி சந்தில் வசிக்கும் ஜவுளி வியாபாரி ரஞ்சித் ஜெயின் - சங்கீதா தம்பதியின், குழந்தைகள் முஸ்கான்,10, ரித்திக்,7. இக்குழந்தைகள், "சுகுணா ரிப்ஸ்' பள்ளியில் படித்தனர். 

முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள் 48 பேர் இன்று விடுவிப்பு
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்த முன்னாள் போராளிகளில் 48பேர் முழுமையான புனர்வாழ்வுக்குப் பின் இன்று புதன்கிழமை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
இவ்வாறு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்களில் 7 பெண்கள்

சீனத் தயாரிப்பான ஆட்லறிகள் புலிகளுக்கு எவ்வாறு கிடைத்தன? இலங்கை இராணுவம் அதிர்ச்சி
முள்ளிவாய்க்கால் கடற்கரையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் 5 ஆட்லறிகள் சீனத் தயாரிப்புக்கள் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. இந்த ஆட்டிலறிகள் விடுதலைப் புலிகளின் கைக்கு எவ்வாறு கிடைத்தன என்பது குறித்து  இலங்கை இராணுவத்தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது.
நீலம் புயலினால் ஏற்பட்ட மண்அரிப்பை அடுத்து, விடுதலைப் புலிகளால் கரையோரத்தில் புதைத்து வைக்கப்பட்ட 5 ஆட்லறிகளை இலங்கை இராணுவத்தினர் நேற்று மீட்டுள்ளனர்.
ராஜீவ்காந்தியின் கொலைக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை: கே.பி.முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலைக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்தார்.இந்திய மத்திய புலனாய்வு, அதிகாரிகள் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனிடம் விசாரணை நடத்தியுள்ளதாக த இண்டியன் எக்ஸ் பிரஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

ad

ad