புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 நவ., 2012


ஐ.நா.வில் இலங்கையின் நியாயங்களை வெளிப்படுத்தும் தூதுக்குழு : (நேரலை ஒளிபரப்ப
ஜெனீவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரைவையின் அனைத்துல ஆவர்த்தன பரிசீலனையில் இலங்கை தற்போது தன்பக்க கருத்துக்களை முன்வைத்து கொண்டிருக்கின்றது. 
அமைச்சர் மஹிந்த சரமசிங்கவின் தலைமையிலான இலங்கையின் தூதுக்குழுவினர் தமது நாட்டின் சார்பான கருத்தினை தற்போது முன் வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஜனநாயகத்தை கொண்டுவருதல்,
சிறுவர் போராளிகளின் புனர்வாழ்வு,
காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணை
போன்றவை தொடர்பிலான கேள்விகளே எதிர்பார்க்கப்படுகின்றன.

மனித உரிமைகள் மேம்படுத்தல் மற்றும் பாதுகாத்தலுக்கான வேலைத்திட்டம் என்பது தனது பிரதான கொள்ளை ஆவணமாக இலங்கை தூதுக்குழு பயன்படுத்தவுள்ளது.

அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஐரோப்பியா ஒன்றியம் அங்கத்துவ நாடுகள் கியூபா, சீனா ஆகிய நாடுகளும் கேள்விகளை அனுப்பியுள்ளன.
இந்தியா தலைமையில் பெனின் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளை கொண்ட ஒரு குழு இலங்கையின் கருத்துக்களை மதீப்பீடு செய்யும்.

இலங்கை அரசாங்கம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சிவில் சமூக குழுக்களின் அறிக்கைகளை ஆராய்ந்து இதனடிப்படையில் மதிப்பீடு அமையும் என்று தெரிவிக்கப்படுகின்றது.


ad

ad