புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 டிச., 2012

இரண்டு லீக் போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 6 புள்ளிகளுடன் "ஏ' பிரிவில் முதலிடத்திற்கு முன்னேறியது.
இந்திய அணி, தனது முதல் லீக் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது. நேற்று நடந்த இரண்டாவது லீக் போட்டியில் நியூசிலாந்தை சந்தித்தது. ஆட்டத்தின் 3வது நிமிடத்தில் இந்திய கேப்டன் சர்தார் சிங் தட்டிவிட்ட பந்தை ருபிந்தர்பால் சிங் தடுக்க

கைது செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை விடுவிப்பது குறித்த பேச்சுவார்த்தை தோல்வி
யாழ். பல்கலைக்கழக சமுகத்திற்கும் யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்குமிடையில் இடம் பெற்ற சந்திப்புக்கள் தோல்வியில் முடிவடைந்துள்ள நிலையில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை.

தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டமை விஞ்ஞான ரீதியில் உறுதிப்படுத்தப்படவில்லை: பாராளுமன்றில் சிறிதரன் video

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரிழந்தமை தொடர்பில் விஞ்ஞான ரீதியில் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்  எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற பேருந்தும், கிளிநொச்சியில் இருந்து யாழ் நோக்கி பயணித்த பேருந்தும் விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
யாழில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு முல்லைத்தீவை நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், கிளிநொச்சியில் பயணிகளை இறக்கி விட்டு யாழ் நோக்கி திரும்பி வந்த தனியார் பேருந்துமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

தமிழீழமே ஈழத்தமிழர் தேசத்தின் இலக்கெனும் உறுதியுடன் நிறைவுகண்ட நா.தமிழீழ அரசாங்கத்தின் அமர்வு
பிரித்தானிய மண்ணில் இடம்பெற்று வந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது நேரடி பாராளுமன்ற அமர்வானது முக்கிய தீர்மானங்களுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்துள்ளது.

இலங்கை பிரச்சினைக்கு அரசியல் தீர்வு! தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) தனித்து செயல்பட முடிவு!
இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக, தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) தனியான பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கைதான பல்கலை. மாணவர்களை துணைவேந்தர் நேரில் பார்வையிட்டார்! பெற்றோர்களும் உடன் சென்றிருந்தனர்
யாழ். பொலிசாரால் கைது செய்யப்பட்டு வவுனியாவில் உள்ள, பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேரையும் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் தலைமையிலான

கொழும்பிலுள்ள ஐநா அலுவலகத்தை குற்றம் சுமத்தி அமெரிக்கா மற்றுமொரு மனு! வீரவன்ஸ
கொழும்பிலுள்ள ஐநா அலுவலகத்தின் மீது குற்றம் சுமத்தி இலங்கைக்கு எதிரான மற்றுமொரு மனுவை அமெரிக்கா தயாரித்து வருகிறது என்றும், மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டத்தில் இம்மனு சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும்

இலங்கைக்கு இரசாயனப் பொருட்கள் கொண்டு சென்ற கப்பல், கடற்கொள்ளையர்களினால் மடக்கிப் பிடிப்பு
சர்வதேச கடற்பரப்பில் வைத்து இலங்கைக்கு இரசாயனப் பொருட்களை கொண்டு சென்ற கப்பல் ஒன்றை சோமாலிய கடற் கொள்ளையர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.

கல்கிஸ்ஸ கடலில் நீந்தச் சென்ற பிரான்ஸ் பிரஜை உள்ளிட்ட 4 பேரைக் காணவில்லை
கல்கிஸ்ஸ கடலில் நீந்தச் சென்ற பிரான்ஸ் நாட்டுப் பிரஜை உள்ளிட்ட நால்வரைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
hHOCKY 2012 AUSTRALIADay 2 Results:
சர்வதேச கால்பந்து சம்மேளன விருதுக்கு 3 பேர் போட்டி
இதன்படி இந்த ஆண்டுக்கான விருதுக்கு போட்டியில் மொத்தம் 23 பேர் இருந்தனர். அதில் இருந்து 3 பேர் இறுதி சுற்றுக்கு தேர்வாகி உள்ளனர். 
சர்வதேச கால்பந்து சம்மேளனம் ஆண்டுதோறும் உலகின் சிறந்த வீரரை தேர்ந்தெடுத்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது. 

2 டிச., 2012

தென் ஆப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 569 ரன் குவித்து வலுவான நிலையில் உள்ளது.
ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 225 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 163 ரன்னில் சுருண்டது. 62 ரன்கள் முன்னி

யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊடகத்துறையினர் மீது இராணுவம் நடத்தியிருக்கும் கண்மூடித்தனமான தாக்குதல்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கின்றது. 
இதன் மூலம் ஒரு தெளிவான செய்தியைத் தமிழ்ச் சமூகத்துக்கு அரசாங்கம் கூறியிருக்கின்றது. குடாநாட்டில் மாணவர் அமைதியின்மையால் ஏற்பட்டுள்ள பதற்றிலை முடிவுக்கு வரக்கூடிய சூழ்நிலை காணப்படவில்லை என்பதையும் புரிந்துகொள்ள முடிகின்றது.

யாழ்.பல்கலை மாணவர்கள் நால்வரின் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பொலிஸ்மா அதிபர் இலங்கக்கோனுடன் பேச்சுவார்த்தை ஒன்றினை இன்று நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனநாக செயற்பாடுகளில் இராணுவம் தலையிடக்கூடாது :நாளை மறுதினம் யாழில் ஆர்ப்பாட்டம்

மாணவர்களினதும், பொதுமக்களினதும் ஜனநாயக செயற்பாடுகளில் இராணுவத்தினரும், பொலிஸாரும் தலையிடக் கூடாது என வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இணைந்து நாளை மறுதின


யாழ்.பல்கலை​. மாணவர்களின் விடுதலை தொடர்பாக இரா. சம்பந்தன், பொலிஸ்மா அதிபருடன் பேச்சுவார்​த்தை
யாழ்.பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் நால்வரின் விடுதலை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று காலை 11 மணியளவில் பொலிஸ்மா அதிபர்

மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு கடும் சவால் ஏற்படக் கூடிய அபாயம்

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை கடும் சவால்களை எதிர்நோக்க நேரிடலாமென சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ரஸ்யா, சீனா மற்றும் கியூபா ஆகிய நாடுகள் இம்மு

ரஷ்யா - நோர்வே உறவில் புதிய மாற்றம்!- தகவல் பங்காளனாக ஈழத்தமிழன
நோர்வே அரசு இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ரஷ்யாவுடன் புதிய இராஜதந்திர உறவுகளை உருவாக்கி வருகிறது. ரஷ்யாவுக்கும் நோர்வேக்கும் இடையிலான புதிய இராஜதந்திர திருப்பம் வடதுருவ அரசியல் கொள்கையில் உருவாக்கப்பட்டு வருகிறது.

5 மாதத்தில் 1000 மாவீரர் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

தமிழீழத் தாயகத்தில் பெரும்அவதிக்கு உள்ளாகிவரும் மாவீரர் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டமொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர்கள், முன்னாள்

ad

ad