புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 டிச., 2012


ரஷ்யா - நோர்வே உறவில் புதிய மாற்றம்!- தகவல் பங்காளனாக ஈழத்தமிழன
நோர்வே அரசு இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ரஷ்யாவுடன் புதிய இராஜதந்திர உறவுகளை உருவாக்கி வருகிறது. ரஷ்யாவுக்கும் நோர்வேக்கும் இடையிலான புதிய இராஜதந்திர திருப்பம் வடதுருவ அரசியல் கொள்கையில் உருவாக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு அங்கமாக கடந்த வாரம் ரஷ்ய அரசுக்கும் நோர்வே அரசுக்கும் இடையே புதிய பல்கலைக்கழக ஆய்வுகள் மற்றும் வெளியுறவு கொள்கை தொடர்பான உடன்படிக்கை ஒண்று ரஷ்யாவின் வடதுருவ பல்கலைக்கழக ஆய்வு பிரிவில் கைச்சாத்திடபட்டது.
இந்த இரு நாட்டு உடன்படிக்கை நிகழ்வில் பல இராஜதந்திரிகள் ரஷ்ய அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆய்வாளர்கள் அரசியல் நிபுணர்கள் இருநாட்டு கொள்கை வகுப்பாளர்கள் என்று பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரு நாட்டு உறவு நிகழ்ச்சியின் தகவல் பங்காளனாக ஈழத்தமிழன் ஒருவரை ஏற்பாட்டுக் குழு தெரிவு செய்திருந்தது.
குறித்த இருநாட்டு புதிய உறவுகளின் அனைத்து தகவல்களையும் ஈழத் தமிழரான நோர்வே நியூஸ் நிறுவனத்தின் தோற்றுவிப்பாளனும் செய்தியாளனுமான நடராஜா சேதுரூபன் ஏற்பாட்டுக் குழுவின் அழைப்பை ஏற்று இந்த வரலாற்று முக்கியத்துவமான இரு நாட்டு உடன்படிக்கையில் கலந்துகொண்டார்.
இதனைத்தொடர்ந்து ரஷ்யாவில் புதிய ஊடக புரட்சி உருவாக்க வேண்டும் என்ற தலைப்பில் ரஷ்ய நாட்டு ஊடக கற்கைகளை மேற்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான பயிற்சியும் வழங்கபட்டது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஈழத்தமிழரான நடராஜா சேதுரூபன்,
நோர்வேயுடனான ரஷ்ய உறவு எதிர்காலத்தில் நோர்வே ஈழத்தமிழர் விடயத்தை கையாளும் வெளியுறவுக் கொள்கைக்கு சாதகமாக ஒரு வெளியுறவுக் கொள்கையை ரஷ்யா இந்தியாவுடனும் நோர்வேயுடனும் இணைந்து எடுக்குமாக இருந்தால்,
அல்லது அதற்கான அழுத்தத்தை நோர்வேயும் இந்தியாவும் அமெரிக்காவுடன் இணைந்து ரஷ்யாவுக்கு இராஜதந்திர மட்டத்தில் கொடுக்குமாக இருந்தால் அத்தகைய ஒரு புதிய மாற்றம் ஈழத்தமிழருக்கு ஐக்கிய நாடுகள் சபையில் சாதகமான ஒரு முடிவை எதிர்காலத்தில் உருவாக்கும் எனவும் தெரிவித்தார்

ad

ad