புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜன., 2013

இலங்கை இளைஞர் ஒருவருக்கு கட்டாரில் உள்ள நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை விதித்துள்ளது.

வெங்கடாசலம் சுதேஷ்கர் என்ற 22 வயதான இளைஞருக்கே கட்டாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கட்டார் தூதரகத்தின் மூலம் வெளிவிவகார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ராம்ஜெத்மலானியை மீண்டும் பாஜகவில் சேர்க்க முடிவு
கட்சி மேலிடத்துக்கு எதிராக பேசியதற்காக, பா.ஜ.,விலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட, ராம்ஜெத் மலானியை, மீண்டும் கட்சியில் சேர்க்க, பா.ஜ., தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.


நடிகர் ஜெகதிஸ்ரீகுமார் என் தந்தை: ஐகோர்ட்டில் இளம்பெண் வழக்கு
 

பிரபல மலையாள காமெடி நடிகர் ஜெகதிஸ்ரீகுமார். குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த வருடம் விபத்தில் சிக்கி காயமடைந்தார். வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


தற்கொலை செய்ததாக எழுதி வாங்கிவிட்டு மகளை கொன்ற தந்தை
உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் 23 வயது மகளை கொலை செய்ததாக பொறியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ப.சிதம்பரம் குடும்பத்தினர் ஆக்கிரமித்த இடத்தை இடித்து தள்ளிய
 மீனவர்கள்- பதற்றத்தால் போலீஸ் குவிப்பு 
சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே மீனவக் கிராமத்தை மத்திய  நிதியமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தினர் ஆக்கிர மித்துக் கட்டியதாகக் கூறப்படும் சுவரை,  இன்று

12 ஜன., 2013


ரிஸானா

OlehArulezhilan
January 11, 2013

30-01-2007
அல் த்வாத்மி சிறைச்சாலை,
அல் தவாத்மி, சவுதி அரேபியா.
எனது உண்மையான வயது 19. நான் பிறந்த தேதி 02-02-1988. எனது வயது ஏஜெண்ட் அஜிர்தீன் என்பவரால் 02-02-1982 என மாற்றப்பட்டு எனக்காக கடவுச்சீட்டு வழங்கப்பட்டது. 01-04-2005-ல் நான் சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்காக வந்தேன். சுமார் ஒன்றரை மாதங்கள் ஒரு செல்வந்தரின் வீட்டில் வீட்டு வேலை செய்தேன். இந்த வீட்டில் சமைத்தல், பாத்திரங்களை கழுவுதல், நான்கு மாதக் குழந்தையைக் கவனித்துக் கொள்ளுதல் உள்ளிட்ட வேலைகளை நான் பார்த்து வந்தேன். ஐய்ரோப்பாவைச் சார்ந்த எவர் ஒருவரும் இப்படியான தண்டனைகளுக்கு சவுதியில் உள்ளாக முடியாது என்பதெல்லாம் தனிக்கதை. எண்ணெய் வளம் கண்டறியப்பட்டதையொட்டி சவுதி மன்னராட்சி மேற்குலகோடு செய்து கொண்ட தொழிலாளர், மற்றும் வணிக ஒப்பந்தங்கள் சவுதி அரேபியச் சட்டங்களின் படி ஐய்ரோப்பியர்களை தலை வெட்டித் தண்டிக்க முடியாத விலக்கை அளிக்கிறது. ரிஸானா வெள்ளை தேசத்தவராக இருந்தால் நிச்சயம் இந்த தண்டனை அவருக்குக் கிடைத்திருக்காது.
குறித்த சம்பவம் நடந்த தினம் எனக்கு நினைவில் இல்லை. அது ஒரு ஞாயிற்றுக் கிழமை பகல் 12-30 மணியிருக்கும். அப்போது யாரும் வீட்டில் இருக்கவில்லை. நான் மட்டுமே இருந்தேன். அங்குள்ள நான்கு மாதக் குழந்தைக்கு நானே பால் கொடுப்பேன். அன்றைக்கும் வழமை போல பால் கொடுத்த போது குழந்தையின் மூக்கிலிருந்து பால் கொட்டியது. அப்போது நான் குழந்தையின் தொண்டையை தடவிக் கொடுத்தேன். குழந்தை கண் மூடியிருந்த படியால் நான் அது அயர்ந்து உறங்குகிறது என நினைத்துக் கொண்டேன்.

4 தொகுதிகளில் போட்டியிட்டதை எதிர்த்த  ஜெயலலிதா மீதான குற்றவியல் வழக்கு ரத்தானது.  ஜெயலலிதாவின் மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜெயலலிதா மீது தேர்தல் ஆணையம் தொடர்ந்த குற்றவியல் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது
மேலும் திமுக குப்புசாமி தொடர்ந்த மூல வழக்கை சென்னை ஐகோர்ட் விசாரிக்க அனுமதி வழங்கியும், ஜெ.மீதான வழக்கை சென்னை ஐகோர்ட் 4 மாதத்தில்  விசாரித்து முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  


தயாநிதிமாறன் வழக்கு:
சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சராக, தயாநிதி பதவி வகித்த போது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தன் சகோதரருக்கு சொந்தமான, "டிவி' நிறுவனத்துக்கு, 323 தொலைபேசி இணைப்புகளை வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி, சி.பி.ஐ., மற்றும் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு, சுப்ரீ

பிரேரணை நிறைவேற்றத்தின் போது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்குமுறைகள் தவறானவை! அமெரிக்கா
இலங்கையில் பிரதம நீதியரசருக்கு எதிராக குற்றவியல் பிரேரணை நிறைவேற்றப்பட்ட ஒழுங்குமுறைகள் தொடர்பில் அமெரிக்கா, தமது கவலையை வெளியிட்டுள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்டே ரிசானாவிடம் குற்றப்பத்திரிகையில் கையொப்பம் பெறப்பட்டது! மரண தண்டனை கண்டிக்கத்தக்கது! – நவநீதம்பிள்ளை
ரிசானா நபீக் சவூதியில் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டமையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கண்டித்துள்ளார்.

சவுதி அரேபிய சிறைச்சாலைகளில் இலங்கையைச் சேர்ந்த நான்கு பேர் மரண தண்டனையை எதிர்கொள்ளக் கூடிய அபாயம் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல திரைப்பட நடிகருமான ரஞ்சன் நாமநாயக்க தெரிவித்தார்.
அவர்கள் மீது இப்போது மதரீதியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தாலும் அது ரிசானாவைப் போலவே மரண தண்டனைக்கு வழி வகுக்கக் கூடும் என அவர்கள்

“ரிஸானா”வின் மரணத்துக்கு யார் பொறுப்பு?(Who is responsible for Rizana’s death

ஓர் அப்பாவிப் பெண்ணின் மரணத்தின் பின்னணியில்… 

—”ஓர் அரசு என்ற வகையில், இலங்கை தன்னுடைய கடமையைச் சரியாகச் செய்யவில்லை; ரிஸானாவின் மரணத்துக்கு இலங்கை அரசாங்கமே முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும்” என்ற ஆசிய மனித உரிமைகள் ஆணையகத்தின் குற்றச்சாட்டு

—இறந்த குழந்தையின் தாய் மன்னிக்காத படியால் தண்டனையை நிறைவேற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று சப்பைக்கட்டுக் கட்டும் சவூதி அரசு, எந்தக் கட்டத்தில் அதுசெல்லுபடியாகும் என்பதை கவனிக்கத்தவறிவிட்டது. அதாவது, நடந்தது கொலையாக இருக்கும் பட்சத்திலேயே, உரியவர்களின் மன்னிப்பு பற்றிய பேச்சுக்கே இடமிருக்கும். மாறாக, கொலை என்றே உறுதி செய்யப்படாத நிலையில் விதிக்கப்பட்ட மரணதண்டனை முற்றிலும் அநீதியானது என்பதோடு, சவூதி அரசு நடைமுறைப்படுத்துவதாகச் சொல்லும் ஷரீஆ சட்டத்தின் அடிப்படை விழுமியமான “நீதி நிலைநிறுத்தப்படுதல்” என்பதற்கு முற்றிலும் மாறானதும்கூட!

வெளிநாட்டுக்குப் போய்ப் பணியாற்றும் பணிப்பெண்கள் மூலம் மிகப் பெருந்தொகைப் பணத்தை அந்நிய செலாவணியாகப் பெற்றுக்கொள்ளும் ஒரு நாடு, தன்னுடைய குடிமகள் ஒருத்திக்கு ஏற்பட்ட கையறு நிலையின்போது இவ்வாறு மனிதநேயமற்றுச் செயற்பட்டமை வெட்கக்கேடானதாகும். அவ்வாறே, இந்த விடயமாகப் பேசுவதற்கென அடிக்கடி சவூதிக்குப் பறந்த அமைச்சர்களில் யாரும் பாதிக்கப்பட்ட குடும்பத்தை, குறிப்பாக குழந்தையின் பெற்றோரை நேரில் சந்தித்து அவர்களுக்கு நிலைமையைத் தெளிவுபடுத்த முனையவில்லை. வெறுமனே அறிக்கை விடுவதன் மூலமே “எல்லாம்” நடந்துவிடும் என்று மனப்பால் குடித்துவந்த இலங்கை அரசும் சரி, அதன் அமைச்சர்களும் சரி வெறுமனே ஒரு நிமிட நேர நாடாளுமன்ற மௌன அஞ்சலி மூலம், தம்முடைய முகத்தில் படிந்துள்ள கரியைத் துடைத்துக்கொள்ளலாம் என்று கருதிவிட்டார்கள் போலும்!



சிறுவர்கள் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்

எங்கள் தமிழ்  பெண் ரிசானாவுக்கு நடந்த கொடுமை  சவூதி அரசின் தண்டனை இதுவா ?

எங்கே  என்ன செய்து கொண்டிருகிறீர்கள் அரசாங்கத்தோடு ஒட்டி இருந்து சுகபோக வாழ்வை  அனுபவிக்கும் முஸ்லிம்களின் சாட்சிகளாக கத்திக் கொண்டிருக்கும்  முஸ்லிம் கட்சிகளே .உங்கள் மனசாட்சி எங்கே இன்னுமா உறவுஅரசோடு.  ஒரு சிங்களப் பெண்ணுக்கு நடந்தால் பார்த்து கொண்டிருகும அரசாங்கம் தனது கஷ்டம்  காரணமாக சவூதி போன பெ ண்ணு க்கு இந்த கொடுமை    எத்தனை பணிப்பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகின்றனர் அவர்களுக்கு அந்த எசமானர்களுக்கு கழுத்து வெட்டகூடாத எங்கே போகிறது உலக நீதி 

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு 3 பேர் போட்டி

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு 3 பேர் போட்டியிடவுள்ளமை உறுதியாகியுள்ளது.


தெரிவுக்குழு அறிக்கை மீதான வாக்கெடுப்பு : 106 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநயக்கவுக்கு எதிரான தெரிவுக்குழு அறிக்கை மீதான வாக்கெடுப்பில் 106 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது.


தெரிவுக்குழு அறிக்கை மீதான வாக்கெடுப்பு : 106 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநயக்கவுக்கு எதிரான தெரிவுக்குழு அறிக்கை மீதான வாக்கெடுப்பில் 106 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது.


மேர்வினின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்பு

 
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் களனி தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து விலகும் அமைச்சர் மேர்வின் சில்வாவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.

ad

ad