புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜன., 2013


பிரேரணை நிறைவேற்றத்தின் போது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்குமுறைகள் தவறானவை! அமெரிக்கா
இலங்கையில் பிரதம நீதியரசருக்கு எதிராக குற்றவியல் பிரேரணை நிறைவேற்றப்பட்ட ஒழுங்குமுறைகள் தொடர்பில் அமெரிக்கா, தமது கவலையை வெளியிட்டுள்ளது.
இந்த குற்றவியல் பிரேரணை நிறைவேற்றத்தின் போது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்குமுறைகள் முற்றிலும் தவறானவை.
உயர்நீதிமன்றத்தின் கட்டளைகளை புறந்தள்ளிவிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த பிரேரணை நிறைவேற்றம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
நீதிமன்றத்துக்கு உள்ள அதிகாரங்கள் மற்றும் நாடாளுமன்றத்துக்கு உள்ள அதிகாரங்கள் என்றவகையில் அதிகாரங்கள் தொடர்பில் எழுந்துள்ள முறுகல் அந்த நிறுவனங்களின் ஜனநாயக தன்மைகளுக்கு பிரச்சினையை ஏற்படுத்தும் என்று அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் ஆர்ப்பாட்டங்களின் போது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் ஜனநாயக வரம்புகளுக்கு அப்பாற்றப்பட்டவையாக அமைந்துள்ளன.
எனவே இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் கரிசனையை ஏற்று நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முன்வரவேண்டும் என்று அமெரிக்க தூதரகம் கோரியுள்ளது.

ad

ad