புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜன., 2013


“ரிஸானா”வின் மரணத்துக்கு யார் பொறுப்பு?(Who is responsible for Rizana’s death

ஓர் அப்பாவிப் பெண்ணின் மரணத்தின் பின்னணியில்… 

—”ஓர் அரசு என்ற வகையில், இலங்கை தன்னுடைய கடமையைச் சரியாகச் செய்யவில்லை; ரிஸானாவின் மரணத்துக்கு இலங்கை அரசாங்கமே முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும்” என்ற ஆசிய மனித உரிமைகள் ஆணையகத்தின் குற்றச்சாட்டு

—இறந்த குழந்தையின் தாய் மன்னிக்காத படியால் தண்டனையை நிறைவேற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று சப்பைக்கட்டுக் கட்டும் சவூதி அரசு, எந்தக் கட்டத்தில் அதுசெல்லுபடியாகும் என்பதை கவனிக்கத்தவறிவிட்டது. அதாவது, நடந்தது கொலையாக இருக்கும் பட்சத்திலேயே, உரியவர்களின் மன்னிப்பு பற்றிய பேச்சுக்கே இடமிருக்கும். மாறாக, கொலை என்றே உறுதி செய்யப்படாத நிலையில் விதிக்கப்பட்ட மரணதண்டனை முற்றிலும் அநீதியானது என்பதோடு, சவூதி அரசு நடைமுறைப்படுத்துவதாகச் சொல்லும் ஷரீஆ சட்டத்தின் அடிப்படை விழுமியமான “நீதி நிலைநிறுத்தப்படுதல்” என்பதற்கு முற்றிலும் மாறானதும்கூட!

வெளிநாட்டுக்குப் போய்ப் பணியாற்றும் பணிப்பெண்கள் மூலம் மிகப் பெருந்தொகைப் பணத்தை அந்நிய செலாவணியாகப் பெற்றுக்கொள்ளும் ஒரு நாடு, தன்னுடைய குடிமகள் ஒருத்திக்கு ஏற்பட்ட கையறு நிலையின்போது இவ்வாறு மனிதநேயமற்றுச் செயற்பட்டமை வெட்கக்கேடானதாகும். அவ்வாறே, இந்த விடயமாகப் பேசுவதற்கென அடிக்கடி சவூதிக்குப் பறந்த அமைச்சர்களில் யாரும் பாதிக்கப்பட்ட குடும்பத்தை, குறிப்பாக குழந்தையின் பெற்றோரை நேரில் சந்தித்து அவர்களுக்கு நிலைமையைத் தெளிவுபடுத்த முனையவில்லை. வெறுமனே அறிக்கை விடுவதன் மூலமே “எல்லாம்” நடந்துவிடும் என்று மனப்பால் குடித்துவந்த இலங்கை அரசும் சரி, அதன் அமைச்சர்களும் சரி வெறுமனே ஒரு நிமிட நேர நாடாளுமன்ற மௌன அஞ்சலி மூலம், தம்முடைய முகத்தில் படிந்துள்ள கரியைத் துடைத்துக்கொள்ளலாம் என்று கருதிவிட்டார்கள் போலும்!

ad

ad