புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜன., 2013



தயாநிதிமாறன் வழக்கு:
சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சராக, தயாநிதி பதவி வகித்த போது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தன் சகோதரருக்கு சொந்தமான, "டிவி' நிறுவனத்துக்கு, 323 தொலைபேசி இணைப்புகளை வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி, சி.பி.ஐ., மற்றும் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு, சுப்ரீ
ம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சுவாமிநாதன் குருமூர்த்தி என்பவர், தன் வழக்கறிஞர், பினா குப்தா மூலமாக, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில்,  ‘’தயாநிதி, மத்திய தொலை தொடர்பு அமைச்சராக, பதவி வகித்தார். அவரது அலுவல் தொடர்பான பணிகளுக்கும், டில்லியில் இருந்த, அவரது அதிகாரப்பூர்வமான இல்லத் துக்கும், ஒரு சில டெலிபோன் இணைப்புகளை மட்டுமே, பயன்படுத்துவதற்கான உரிமை அவருக்கு உள்ளது.ஆனால், 2007, ஜனவரியில், தன் சகோதரருக்கு சொந்தமான, சன் "டிவி' நெட்ஒர்க் நிறுவனத்தின் பயன்பாட்டுக்காக, தன், சென்னை வீட்டிலிருந்து, 323 இணைப்புகளை அவர் அளித்துள்ளார்.

இதற்காக, அவரின் வீட்டிலிருந்து, "டிவி' நிறுவனத்தின் அலு வலகத்துக்கு, பிரத்யேகமாக கேபிள்கள் அமைக் கப்பட்டன. இதன் மூலம், தன் அதிகாரத்தை, அவர் துஷ்பிர யோகம் செய்துள்ளார்.
அவரின் இந்த நடவடிக்கையால், மத்திய அரசுக்கு, 440 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்தபோதும், அரசியல் நெருக்கடி காரணமாக, மத்திய அரசோ, சி.பி.ஐ.,யோ, இது தொடர்பாக, அடுத்த கட்டமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுகுறித்து, சி.பி.ஐ., இயக்குனருக்கு, ஆதாரங்களுடன், நான் கடிதம் எழுதியபோதும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சி.பி.ஐ., சார்பில், 2007ல், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி, தொலை தொடர்பு செயலருக்கு, பரிந்துரை செய்யப்பட்டும், அவர்களும், இதை கண்டு கொள்ளவில்லை’’என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதி, அப்தாப் ஆலம் தலைமையிலான பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக பதில் அளிக்கும்படி, சி.பி.ஐ., மற்றும் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு, நோட்டீஸ் அனுப்ப, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ad

ad