புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 செப்., 2013

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் அனந்தி சசிதரன் அரசாங்க கட்சிக்கு மாறிவிட்டதாக தலைப்புச் செய்தியுடன் போலி உதயன் பத்திரிகை
இன்று காலை இனந்தெரியாத நபர்களினால் வெளியிடப்பட்டுள்ள நிலையில் , இவ்வாறான செய்திகளை நம்பவேண்டாம் எனவும் , மக்கள் குழப்பமடைய வேண்டாம் எனவும் அனந்தி தெரிவித்துள்ளார் .

இன்றைய தினம் அதிகாலை 3 மணியளவில் உதயன் பத்திரிகையினைப் போன்றே மிகவும் போலியாக பதிப்பிக்கப்பட்ட பத்திரிகைகள் யாழ் . மாவட்டத்திலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கின்றன. அந்த பத்திரிகையில் உதயன் பத்திரிகையின் பெயர் பொறிக்கப்பட்டிருந்த நிலையில் வர்த்தக நிலையத்தினர் அவற்றைப் பெற்றுள்ளனர்.

பின்னர் அவர்களுக்கு ஒருவாறாக விடயம் விளங்கிய நிலையில் , அதிகாலை 3.30 மணிக்கெல்லாம் , உதயன் அலுவலகத்திற்கு விடயம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து , உதயன் பணியாளர்கள் விரைந்து அந்த போலிப் பத்திரிகைகளை குறித்த வர்த்தக நிலையங்களிலிருந்து முழுமையாக அகற்றியுள்ளனர்.

குறித்த பத்திரிகையில் நேற்று அதிகாலை அனந்தி வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தையடுத்தும் , எழிலன் இனந்தெரியாத நபர்களினால் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்தும் உடனடியாக அவர் அரசாங்க கட்சிக்கு மாறியுள்ளதாக தலைப்பு செய்தி போடப்பட்டுள்ளது. எனினும் தற்போது பாதுகாப்பான இடம் ஒன்றில் தங்கியிருக்கும் அனந்தி , அதனை முழுமையாக மறுத்துள்ளதுடன் , தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருப்பதாகவும் , இவ்வாறான செய்திகளை நம்பவேண்டாம் என்றும் மக்களிடம் கேட்குமாறு அவர் ஊடகங்களிடம் கேட்டுள்ளார்.
12மணியளவில் பதிவான வாக்களிப்பு வீதம்!

யாழ்ப்பணத்தில் 30 வீதம்

முல்லைத்தீவில் 40 வீதம்

கிளிநொச்சியில் 30 வீதம்

வவுனியாவில் 20 வீதம்

மன்னாரில் 25 வீதம்

மக்களை அச்சுறுத்தலுக்கு அஞ்சாது வாக்களிக்க செல்லுங்கள்..
ஐந்து மாவட்டங்களிலும் தமிழ் மக்கள் தன்னெழுச்சியாக வாக்களிப்பு நிலையைத்தை நோக்கி விரைந்த வண்ணம் உள்ளனர்..

படம் - யாழ்ப்பணத்தில் தனது வாக்கை செலுத்திவிட்டு வரும் தமிழரசுக் கட்சியின் செயலாளரும் யாழ்.நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா..


வவுனியா மாவட்ட வேட்பாளர் எம்.எம். ரதன் அவர்கள் இன்று காலை வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார்.
மன்னார் மாவட்டத்தில் சுமூகமான முறையில் இடம் பெற்று வருகின்றது.

மன்னார் மாவட்டத்தில் பல இடங்களுக்கு வாக்களர்களை ஏற்றி வாக்குச்சாவடி அமைந்துள்ள இடங்களுக்கு இறக்கி விடுவதற்காக தமிழ் தேசியக்கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தனியார் போக்குவரத்து சேவைகள் பலவற்றை பொலிஸார் தலையிட்டு நிறுத்த முயற்சி.

கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்களான த.குருகுலராசா, ப.அரியரத்தினம், சு.பசுபதிப்பிள்ளை ஆகியோர் தமக்குரிய வாக்களிப்பு நிலையங்களில் வாக்கினை செலுத்தினார்கள்..
யாழ்ப்பாணம் தென்மராச்சி, வரணி பிரதேசத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரஷ் பிரேமச்சந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்களது வேன் மீது இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். 

வரணி பிரதேசத்தில் புலனாய்வாளர்கள் நடமாடுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தன்னுடைய ஆதரவாளர்களுடன் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளார். இதன் போது அங்கிருந்த நபர் வரணி பிரதேசத்திலிருந்து இராணுவ முகாமிற்குள் ஓடியுள்ளார். இந்நிலையில் சுரேஷ் பிரேமச்சந்திரன் அவ்விடத்திலிருந்து செல்ல திட்டமிட்டுள்ளார். 

இரண்டு வேன்களில் சென்ற சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தங்களுடைய வேனில் திரும்பும்போது இராணுவத்தினர்கள் அவர்களுடைய வேனை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். சுரேஷ் பிரேமச்சந்திரன் பயணித்த வேனுக்கும் இராணுவ முகாமிற்கும் 100 மீற்றர் தூர இடைவெளியில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 15 - 20 துப்பாக்கி வேட்டுக்கள் வேனை நோக்கி சுடப்பட்டது. துப்பாக்கிச் சூட்டின் காரணமாக வேனின் கண்ணடாடிகள் உடைந்து வேன் சேதடைந்துள்ளது. வரணி மகா வித்தியாலய தேர்தல் வாக்குச் சாவடிக்கு முன்பாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

பிரதேசத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாக்களிப்பு ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
யாழ்ப்பணத்தில் பொய் செய்தியை பரப்பி வரும் இலங்கை அரசின் முகவர்களான டான் டிவி கலையகம் முன்பாக மாவை சேனாதிராஜா மற்றும் அனந்தி சசிதரன் தற்போது முற்றுகை

யாழ்ப்பாணம் திக்கம் பகுதியில் மக்கள் கொளுத்தும் வெயிலுக்கும் மத்தியில் எழுச்சியுடன் வாக்களிக்க காத்து நிற்கின்றனர்..
தீவுப்பகுதி மக்களுக்கு அன்பான வேண்டுகோள் -ஐரோப்பிய தீவுப்பகுதி மக்கள் ஒன்றியம் 

எதிர்வரும் 21 ஆம் திகதி வடமாகாண  சபை தேர்தல் நடைபெறவுள்ள  நிலையில் நீங்கள்   என்ன செய்ய போகின்றீர்கள்? காலாகாலமாக தீவுப்பகுதி
இப்போது தேர்தலில் வாக்களிக்கும் நேரம் ஆரம்பமாகி விட்டது.

ஈழமுரசு ஆசிரியர் தலையங்கம்

 வரலாற்றில் என்றும் இல்லாதளவிற்கு கடும் அச்சுறுத்தல்களுடனும், எச்சரிக்கைகளுடனும் வடமாகாண சபைக்கு தேர்தல் நடத்தப்படுகின்றது. இந்தத் தேர்தலில் தங்கள் வெற்றிகளை விட, எதிர்த்துப் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை தோற்கடிக்க வேண்டும்



             பெண்கள் குளிப்பதையும், ஆடைகள் மாற்றுவதையும் காமுகர்கள் செல்ஃபோனில் படம் பிடித்து ரசிப்பதை ஏற்கனவே நக்கீரனில் எழுதி, கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் பெண்களை உஷார்படுத்தியிருந்தோம்.
அனந்தி சசிதரன் மீது வழக்குத் தாக்கல் செய்வோம்: ஈபிடிபி
தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் அனந்தி சசிதரனின் வீட்டின் மீதும், ஆதரவாளர்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கும் எமக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை ஆனால் அவர்மீது நாம் வழக்குத் தாக்கல் செய்வோம் என ஈபிடிபி கட்சி தெரிவித்துள்ளது.
“மாகாண சபை போதுமானதல்ல; இலக்கு ஒன்றை அடைவதற்கான வழிமுறையே” – தர்மலிங்கம் சித்தார்த்தன்

13ஆவது அரசியலமைப்புத் திருத்தம், தமது அமைப்பு கடந்து வந்த பாதை, விடுதலைப் புலிகளுடனான உறவு, தனது தனிப்பட்ட அரசியல் பயணம், எதிர்காலம் பற்றிய எண்ணங்கள் தொடர்பாகப் புதினப்பலகையின் (நன்றி )செந்தூரன் சந்திரநாதனுடன் உரையாடினார் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன். 
[தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் - புளொட் அமைப்பினதும், அதன் அரசியற் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினதும் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளராக வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றார்.]
கேள்வி: தமிழ்த் தேசிய அரசியல் ஒரு முக்கிய திருப்புமுனைக்கான பயணத்தில் நிலைகொண்டிருப்பதாகவே பல அரசியல் அவதானிகளும் அபிப்பிராயப்படுகின்றனர். ஒரு புறம் இலங்கை அரசின் மீதான ஜக்கிய நாடுகள் சபையின் அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. பிறிதொரு புறம் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக செயற்படுத்த வேண்டும் என்றவாறன பிராந்திய அழுத்தமும் அதிகரித்திருக்கின்றது. ஏதோ ஒரு
 அமெ. ராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கை முகப்பில் ஈழப்பெண்கள் 
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள, "ரூ வோல்க் த ஏர்த் இன் சேவ்ரி' (To Walk the Earth in Safety) என்ற அறிக்கையின் முகப்பு அட்டையில், வடக்கு மாகாணத்தில் மிதிவெடி அகற்றும்
தற்போது வந்த செய்தி

வட மாகான சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 29-32 இடங்களை பிடிக்கும் .

எமது செய்தியாளர்களின் கருத்து கணிப்பின் படி இந்த தகவல் வந்துள்ளது. யாழ் மாவட்டத்தில் முன்னணியில் இருந்த விக்கினேஸ்வர்ன் அவர்களுக்கும் ஆனந்தி சசிதரனுக்கும் இடையே முதலாம் இடத்தை அடைய கடும் போட்டி நிலவுகிறது கடந்த இரவு நடைபெற்ற அனந்தி மீதான தாக்குதலுக்கு பிறகு மேலும் ஆதரவு இவருக்கு கூடும் என கணிக்கப்படுகிறது . 3 ஆம் 4 ஆம்  5 ஆம் இடங்களுக்கு கஜதீபன் ,சித்தார்த்தன்,ஐங்கரநேசன்,சிவஞானம் ஆகியோர் போட்டியில் இருப்பதாக அறிகிறோம்.மற்றும் சிவாஜிலிங்கம்  நல்ல ஆதரவை பெறக்கூடும்.கிளிநொச்சி  மாவட்டத்தில் ஆனந்த சங்கரியின் நிலைமை மோசமாக உள்ளது .இங்கே ஸ்ரீதரன் குழு அவரை தனக்கு போட்டியாக கிளிநொச்சியில் தலை எடுப்பாரோ என்ற சந்தேகத்தில் ஒதுக்கி வருவதாக அறிகிறோம்.கூட்டுக் கட்சிகள் என்ற நிலையில் இருந்து விலகி தமிழரசுக் கட்சி என்ற நிலைய ஸ்ரீதரன் எடுத்துள்ளார் .அவரது ஆதரவு வேட்பாளர்கள் வெல்வதற்கான சூழல் இருக்கிறது மன்னர் வவுனியா மாவட்டங்களில் அரச தரப்பு கடும் போட்டியில் ஈடுபடுகிறது.முல்லைத்தீவு மாவட்டத்தில் கிழக்கு பகுதியில் ராணுவத்தின் குளறுபடிக்கான வாய்ப்பு நிலவுகிறது .மொத்தமாக வாக்களிப்பு வீதம் கூடினால் 32 இடங்கள் வரை கூட்டமைப்பு பெறலாம்.இராணுவம் வாக்களிப்பு வீதத்தை குறைக்கும் வன்முறைகளில் ஈடுபட வாய்ப்பு உள்ளது இப்போதே .ஸ்ரீதரன்.ஆனந்தி வீடுகளில் நடந்தேறி விட்டது 

142 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான 3 மாகாண சபைகளினதும் தேர்தல் இன்று

வட, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கு மொத்தமாக 142 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் வாக்களிப்பு இன்று மூன்று மாகாணங்களிலும் உள்ள 10 மாவட்டங்களிலும்
வேட்பாளர் எம்.எம். ரதன் மீது தாக்குதல் முயற்சி
வட மகாண சபைத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் இலக்கம் 8ல் போட்டியிடும் எம்.எம்.ரதன் மீது தாக்குதல் நடாத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Latest News 

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் காரியாலயம் இராணுவ புலனாய்வாளர்களால் சுற்றிவளைப்பு
கிளிநொச்சியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் காரியாலயமாகிய அறிவகத்தை சுற்றி பதினைந்துக்கும் மேற்பட்ட இராணுவப்புலனாய்வாளர்கள் மற்றும் ஒட்டுக்குழுக்கள் அச்சுறுத்தும் வகையில் தற்பொழுது நிலைகொண்டுள்ளனர்.

ad

ad