புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 செப்., 2013

தற்போது வந்த செய்தி

வட மாகான சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 29-32 இடங்களை பிடிக்கும் .

எமது செய்தியாளர்களின் கருத்து கணிப்பின் படி இந்த தகவல் வந்துள்ளது. யாழ் மாவட்டத்தில் முன்னணியில் இருந்த விக்கினேஸ்வர்ன் அவர்களுக்கும் ஆனந்தி சசிதரனுக்கும் இடையே முதலாம் இடத்தை அடைய கடும் போட்டி நிலவுகிறது கடந்த இரவு நடைபெற்ற அனந்தி மீதான தாக்குதலுக்கு பிறகு மேலும் ஆதரவு இவருக்கு கூடும் என கணிக்கப்படுகிறது . 3 ஆம் 4 ஆம்  5 ஆம் இடங்களுக்கு கஜதீபன் ,சித்தார்த்தன்,ஐங்கரநேசன்,சிவஞானம் ஆகியோர் போட்டியில் இருப்பதாக அறிகிறோம்.மற்றும் சிவாஜிலிங்கம்  நல்ல ஆதரவை பெறக்கூடும்.கிளிநொச்சி  மாவட்டத்தில் ஆனந்த சங்கரியின் நிலைமை மோசமாக உள்ளது .இங்கே ஸ்ரீதரன் குழு அவரை தனக்கு போட்டியாக கிளிநொச்சியில் தலை எடுப்பாரோ என்ற சந்தேகத்தில் ஒதுக்கி வருவதாக அறிகிறோம்.கூட்டுக் கட்சிகள் என்ற நிலையில் இருந்து விலகி தமிழரசுக் கட்சி என்ற நிலைய ஸ்ரீதரன் எடுத்துள்ளார் .அவரது ஆதரவு வேட்பாளர்கள் வெல்வதற்கான சூழல் இருக்கிறது மன்னர் வவுனியா மாவட்டங்களில் அரச தரப்பு கடும் போட்டியில் ஈடுபடுகிறது.முல்லைத்தீவு மாவட்டத்தில் கிழக்கு பகுதியில் ராணுவத்தின் குளறுபடிக்கான வாய்ப்பு நிலவுகிறது .மொத்தமாக வாக்களிப்பு வீதம் கூடினால் 32 இடங்கள் வரை கூட்டமைப்பு பெறலாம்.இராணுவம் வாக்களிப்பு வீதத்தை குறைக்கும் வன்முறைகளில் ஈடுபட வாய்ப்பு உள்ளது இப்போதே .ஸ்ரீதரன்.ஆனந்தி வீடுகளில் நடந்தேறி விட்டது 

ad

ad