புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 செப்., 2013




             பெண்கள் குளிப்பதையும், ஆடைகள் மாற்றுவதையும் காமுகர்கள் செல்ஃபோனில் படம் பிடித்து ரசிப்பதை ஏற்கனவே நக்கீரனில் எழுதி, கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் பெண்களை உஷார்படுத்தியிருந்தோம்.

இந்த நிலையில் கிராமத்தில் உள்ள குளங்கள் மற்றும் கால்வாய்களில் குளிக்கும் பெண்களை மறைந்திருந்து செல்ஃபோனில் படம் பிடிக்கும் கும்பலால் பல கிராம பெண்கள் அச்சத்தில் உள்ளனர்.

குளங்களும், கால்வாய்களும் அதிகம் உள்ள குமரி மாவட்டத்தில் கிராமவாசிகளில் பெரும்பாலோர் குளம் மற்றும் கால்வாய் கரையோரங்களைச் சுற்றித்தான் வசிக்கின்றனர். இதனால் குளியலறை கட்டி குளிப்பதை விட்டுவிட்டு இளம் பெண்கள் முதல் பெரியவர்கள் வரை தினமும் குளங்களிலும்  கால்வாய்களிலும்தான் குளிக்கின்றனர்.

இதைக் கிராமத்தில் உள்ள செல்ஃபோன் காமுகர்கள் வீடுகளில் மறைந்திருந்து படம் பிடித்து ரசித்து வருகின்றனர்.

இதேபோல்தான் குலசேகரம் படநிலம் சிற்றார் பட்டணம் கால்வாய் கரையோரத்தில் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. அந்தக் கால்வாயில் காண்ட்ராக்ட்டர் நாகராஜன் மனைவி, 40 வயதான விஜயா உட்பட பல பெண்கள் தினமும் குளிக்கும்போது கரையோரத்தில் குடியிருக்கும் மணிகண்டன் தனது வீட்டுக்குள் மறைந்து இருந்துகொண்டு ஜன்னல் வழியாகக் குளிக்கும் பெண்களை விதவிதமாகப் படம் பிடித்து ரசித்தும் வந்தான்.



இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி மதியம் விஜயா மட்டும் தனியாக குளிக்கும்போது வழக்கம்போல் செல்ஃபோனில் படம் பிடிச்சிட்டு இருந்த மணிகண்டனுக்கு விஜயாவின் அழகைப் பார்த்து காமவெறி தலைக்கேறியது. உடனே அவன் பட்டப்பகல் என்றும் பார்க்காமல் கால்வாயில் குதித்து, குளித்துக்கொண்டி ருந்த விஜயாவை முழுசா நிர்வாணப்படுத்தி பலாத்காரம் செய்தான். இதில் மயக்கடைந்த விஜயா, அந்த இடத்திலேயே இறந்தார். அதன்பிறகு போலீசார் மணிகண்டனின் செல்ஃபோனை துருவிப் பார்த்தபோது, விஜயா உட்பட அந்த ஊரில் உள்ள பல பெண்கள் குளிப்பதை விதவிதமாகப் படம் பிடித்து வைத்துள்ளான். அதேபோல் அந்த ஊரில் உள்ள மேலும் சிலரின் செல்ஃபோனை போலீசார் பார்த்தபோது இதே மாதிரி அந்த ஊர் பெண்களின் குளியல் சீன் படங்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதேபோல் மற்றொரு சம்பவ மாக இரணியல் அருகே வடக்கு பேயன்குழியில் நடந்ததை நம்மிடம் கூறினார் கவுன்சிலர் ஹேமா. ஊரில் உள்ள கடப்பாண்டிகுளத்தின் கரை யைச் சுற்றி பல வீடுகள் உள்ளன. அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள பெண்கள் இந்தக் குளத்தில்தான் தினமும் குளிக்கின்றனர்.

இந்த நிலையில் பஞ்சாயத்து ஊழியர் ஜெயசீலன் தனது வீட்டுக்குள் நண்பர்களோடு இருந்துகொண்டு தினமும் அந்தக் குளத்தில் பெண்கள் குளிப்பதை செல்ஃபோனில் படம் பிடித்து வந்தான்.

அந்தப் படத்தை ப்ளூடூத் வழி யாகப் பலருக்கும் அனுப்பியிருக்கான். இதேபோல் ராஜேந்திரனின் செல் ஃபோனுக்கு அவன் அனுப்பியதை  ராஜேந்திரன் பார்த்தபோது அதில் தனது 13 வயது மகள் மற்றும் அண்ணன் மனைவி, ஊர் தலைவரின் மனைவி உட்பட பல பெண்கள் குளிப்பது, துணி மாற்றுவது, சோப்பு தேய்ப்பது போன்ற அந்தரங்கப் படக் காட்சிகள் இருந்தன.

இதைப் பார்த்து ஆத்திரமடைந்த பெண்கள் சேர்ந்து இரணியல் போலீ ஸில் 13-ம் தேதி புகார் செய்தார்கள். ஆனால் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் அவன் மீது நடவடிக்கை எடுக்காமல் அந்த செல்ஃபோனில் உள்ள படங்களைப் பார்த்து ரசித்துக்கொண்டு, அந்தப் படங்களில் இருக்கிற பெண்களை விசாரிக்கணும்னு நக்கலா பேசுறாரு. எங்க மானம் என்ன கடையில் விக்கிற பொருளா?'' என்றார் ஆதங்கமாக.

இதைபோல் வேறொரு சம்பவமாக முட்டைக்காடு பகுதியில் 10-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனின் செல்ஃபோனை ஆசிரியர் ஒருவர் பார்த்தபோது அந்த மாணவனின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த உறவுக்காரப் பெண்ணான இன்ஜினியரிங் படிக்கும் மாணவி உட்பட சில பெண்கள் தினமும் கால்வாயில் குளிக்கும் காட்சிகள் இருந் தன. இப்படிப் பெண்கள் குளிப்பதை செல் ஃபோனில் படம் பிடிக்கும் சம்பவம் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் பேயன்குழி முன்னாள் ஊர்த்தலைவர் கிருஷ்ணன் கூறும்போது...

""பெண்கள் குளிப்பதை மட்டும் இந்த காமுகர்கள் படம் புடிக்கலை. பெண்கள் குளித்து விட்டு ஈரத்துணியோடு நடந்து வருவதையும், வீட்டில் கழிவறை வசதி இல்லாத பெண்கள் இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்கு தோப்பு களில் ஒதுங்கும்போதும் அதை மறைந்திருந்து படம் பிடித்திருக்கிறார்கள்.

இது மட்டுமல்ல தாய்மார்கள், குழந்தை களுக்கு பால் கொடுப்பதையும், பெண்கள் குனிந்து நின்று வீட்டு முற்றங்கள் பெருக்கு வதையும் விதவிதமாக படம்பிடிக்கிறார்கள். இப்படிப்பட்ட இந்த அயோக்கியர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக் கை எடுக்கவேண்டும்'' என்றார்.

இது குறித்து மாவட்ட எஸ்.பி. மணிவண்ணனிடம் பேசினோம். 

""பெண்களின் மானத்தைப் பறிக்கும் இந்த செயல் உயிரைப் பறிப்பதைக் காட்டிலும் கொடிய குற்றம்'' என்று கூறிய அவர், ""குமரி மாவட்ட கிராமப்புறங் களில் இதுபோன்று நடக்கும் சம்பவங்களைப் பெண்கள் மட்டுமல்ல, யாராக இருந்தாலும் தயங்காமல் போலீசில் புகார் செய்யலாம். அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார் உறுதியாக.

டெல்லியில், ஓடும் பேருந்தில் மாணவியைக் கற்பழித் தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள் ளது. இனியாவது செல்ஃபோன் காமுகர்கள் திருந்துவார்களா?

ad

ad