புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 செப்., 2013

அனந்தி சசிதரன் மீது வழக்குத் தாக்கல் செய்வோம்: ஈபிடிபி
தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் அனந்தி சசிதரனின் வீட்டின் மீதும், ஆதரவாளர்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கும் எமக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை ஆனால் அவர்மீது நாம் வழக்குத் தாக்கல் செய்வோம் என ஈபிடிபி கட்சி தெரிவித்துள்ளது.
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காண்பியுங்கள் என்பதே எங்கள் அமைச்சரின் சிந்தனை என மேலும் தெரிவித்துள்ளார் ஈபிடிபி தவராசா.
மேற்படி சம்பவம் தொடர்பில் இன்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்தபோதே தவராசா இந்த மகா தத்துவத்தை கூறியிருக்கின்றார்.
குறித்த சந்திப்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,
ஈ.பி.டி.பி மீது அவதூறு பரப்பியமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம். மேற்படி தாக்குதல் சம்பவத்தின்போது அங்கிருந்த அவருடைய ஆதரவாளர்களோ, அல்லது அங்கிருந்த தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் உறுப்பினரோ ஈ.பி.டி.பியினர் அங்கு தாக்குதல் நடத்த வந்ததாக தெரிவிக்கவில்லை. அதேபோல் சம்பவ இடத்திற்குச் சென்ற த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களோ, அவ்வாறு குறிப்பிடவில்லை. ஆனால் குறித்த வேட்பாளர் இராணுவத்தினருடன், ஈ.பி.டி.பியினரும் சம்பவத்துடன் தொடர்புபட்டிருக்கின்றனர் என கூறியிருக்கின்றார்.
அவருடைய குரல் ஒலிப்பதிவுகள் ஊடகங்களில் வெளியாகியிருக்கின்றன.  இது எமது கட்சியின் மீது அவதூறு பரப்பும் ஒரு செயலாகும். அவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை நாம் கண்டிக்கின்றோம். அவ்வாறான சம்பவம் யார் மீது மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் அது கண்டனத்திற்குரியது.
ஆனால் யாழ்.மாவட்டத்தில் எந்தவிதமான வன்முறைச் சம்பவங்களுடனும் தொடர்பற்று அமைதியாக பணியாற்றிக் கொண்டிருக்கும் எமது கட்சியின் மீது அவதூறு பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே குறித்த வேட்பாளர் மீது தேர்தலின் பின்னர் எமது கட்சி வழக்கு தாக்கல் செய்யும் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை நேற்று நடுநிசி 12.45 மணியளவில் தாக்குதல் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் ஈ.பி.டி.பி அமைப்பின் ஆதரவாளர்கள், செயற்பாட்டாளர்கள் சுமார் 20பேர் வரையில் தனது வீட்டிற்கு முன்னால் நடமாடியதனை பிரதேச மக்கள் சிலரும், அனந்தி சசிதரனும் அவரது ஆதரவாளர்களும் கண்டுள்ளனர்.
அதனால் சந்தேகம் கொண்டே அனந்தி சசிதரனை வீட்டைவிட்டு வெளியேற்றினர் ஆதரவாளர்கள். இந்நிலையில் இன்று காலை அப்பகுதியில் கூடிய மக்கள் ஈ.பி.டி.பி இராணுவத்துடன் சேர்ந்து செயற்பட்டமை தொடர்பில் கடுமையான ஆத்திரத்துடன் காணப்பட்டனர் எனவும் தவராசா தெரிவித்துள்ளார்.
சசிதரன் எழிலன் வீட்டில் நேற்று நடுநிசியில் நடந்த  தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள்!

ad

ad