புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 அக்., 2013

அரசோடு ஒத்துழைத்தால் உதவி நிச்சயம்!- ஜனாதிபதி மகிந்த
அரசாங்கத்தோடு ஒத்துழைத்து செயற்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாரென்றால் வடக்கின் அபிவிருத்தி, மேம்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்க நாம் தயாரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கிழக்கில் முஸ்லிம் மக்களின் காணி பிரச்சினை தொடர்பில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் மு.காங்கிரஸ்
கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள முஸ்லிம் மக்களின் காணி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட உள்ளது.
ஜனாதிபதி முன்னிலையில் விக்னேஸ்வரன் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்
வட மாகாணத்தின் முதலமைச்சராக முன்னாள் நீதியரசர் சீ.வி விக்னேஸ்வரன் சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் தமிழ் மொழி மூலம் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
நவிபிள்ளையின் யோசனைக்கு அமைய மாகாண மற்றும் உள்ளூராட்சி சபைகளின் பிரதிநிதிகளுக்கு மனித உரிமை கல்வித்திட்டம்
மாகாண சபை, உள்ளூராட்சி சபைகளின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு மனித உரிமைகள் தொடர்பான கல்வித்திட்டம் ஒன்றை நடத்த இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
வடமாகாண முதலமைசரின் விசேட அறிக்கை !!!

என்னுடைய பதவியின் செயல்பண்புகளையும் கடப்பாடுகளையும் நான் நேர்மையுடனும் நம்பிக்கையுடனும் இயற்றுவேன் என்றுதான் இன்று காலை பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டேன். 
இணையத்தளங்கள் வெளியிடும் செய்தியில் உண்மையில்லை!

இணையத்தளங்கள் சில “அனந்தி, முதலமைச்சர் விக்னேஸ்வரன்அவர்கள் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்ய மாட்டேன் என கூறியதாகவும் அனந்தி 12ஆம் திகதி சமாதான நீதவான் அல்லது சத்தியபிரமாண ஆணையாளர் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்ய இருப்பதாகவும் மாகாணசபையில் கலந்து கொள்ளும் முதலாவது கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்க இருப்பதாகவும்” என விசமத்தனமான பொய்யான செய்திகளை வெளியிட்டுள்ளன. ஆகவே இந்த செய்தியில் உன்மை இல்லை என்பதனை எமது மக்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றோம்..

தினக்குரல் பத்திரிகையின் ஊடகவியலாளர் அமரர் ரவிவர்மாவுக்கு புளொட் அமைப்பு தனது அஞ்சலி தெரிவித்துள்ளது.
அவ் அமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தினக்குரல் பத்திரிகையின் பிரபல ஊடகவியலாளர் ரவிவர்மன் என்கின்ற பரமகுட்டி மகேந்திரராஜா மரணமடைந்த செய்தி எம்மையெல்லாம் பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது.

விக்கினேஸ்வரனின் பதவிப் பிரமாண நிகழ்வில் குர்சித் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்

முன்னாள் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் நாளைய தினம் வடமாகாணத்தின் முதலாவது முதலமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளார். இதன் போது விசேட விருந்தினராக இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் கலந்துக் கொள்வார் என்று தமிழ் தேசியகூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மேல்மருவத்தூரில் நவராத்திரி விழா

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் வெள்ளிக்கிழமை நவராத்திரி விழா சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.

நீலாங்கரையில் டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த 3 வாலிபர்கள் கைது

நீலாங்கரையில் பூட்டிய வீட்டிற்குள் புகுந்து இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். படுக்கை அறையில் இருந்த தானியங்கி கதவை திறக்க முடியாததால் அவர்கள் சிக்கினர்.

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன்

10 அணிகள் இடையிலான 5–வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா கடந்த 21–ந்தேதி தொடங்கியது. லீக் மற்றும் அரைஇறுதி முடிவில் இந்தியாவைச் சேர்ந்த மும்பை இந்தியன்சும், ராஜஸ்தான் ராயல்சும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.இந்த நிலையில்




கொரியன் பார்முலா 1 கார்பந்தயம்: செபாஸ்டியன் வெட்டல் முதலிடம்

பார்முலா1 கார் பந்தயம் மொத்தம் 19 சுற்றுகளை கொண்டதாகும். இதன் 14–வது சுற்றான கொரியன் கிராண்ட்பிரீ பந்தயம் அங்குள்ள யோன்காமில் உள்ள ஓடுதளத்தில் இன்று நடந்தது. 309 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த
இந்தியா முழுவதும் 2½ கோடி பேருக்கு இலவச செல்போன்களை மத்திய அரசு வழங்க இருக்கிறது.
இந்தியாவில் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்திருக்கும் இந்த நிலையில் மத்திய அரசு நாடு முழுவதும் 2½ கோடி பேருக்கு இலவச செல்போன்களை வழங்க முடிவு செய்திருக்கிறது.மின்னணு மயமாவதில் உள்ள இடைவெளியை பூர்த்தி செய்யும் வகையில் குறைந்த விலையில்,

224 பேர் பலியான குண்டு வெடிப்பில் தொடர்பு: அல்கொய்தா இயக்க தலைவர் பிடிபட்டார்

ஆப்பிரிக்க நாடுகளில் குண்டு வெடித்து 224 பேர் பலியான சம்பவத்தில் தொடர்புடைய அல்கொய்தா இயக்க முக்கிய தலைவர் பிடிபட்டார். அமெரிக்க ராணுவம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்தது.

தெலுங்கானாவுக்கு எதிரான போராட்டம் தீவிரம்: விஜயநகரத்தில் ஊரடங்கு; கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு

தெலுங்கானாவுக்கு எதிரான போராட்டம் விஜயநகரம் பகுதியில் கலவரமாக வெடித்தது. இதனால் அந்த பகுதியில் நேற்று 2–வது நாளாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அந்த பகுதியில் கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கிடையே மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
இலங்கையில் இனப்பிரச்சினை இன்னும் தீரவில்லை: திஸ்ஸ விதாரண
இலங்கையில் தேசியப் பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவில்லை என சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
இடதுசாரி அரசியல்வாதியான பீட்டர் கொனமனின் 96வது ஜனன தினத்தை முன்னிட்டு மருதானையில் உள்ள அவரது சிலைக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
வவுனியாவில் டிப்பர் வாகனம் மோதி 6 வயது சிறுமி பலி: சிங்கள சாரதியை காப்பாற்ற முனைந்த பொலிஸார்
வவுனியா ஏ9 வீதியில் இடம் பெற்ற வீதி விபத்தில் ஆறு வயது சிறுமி தலைசிதறிபலியாகியுள்ளார்.இன்று மதியம் 2.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் கணேசன் நிறோசினி என்ற ஆறு வயது சிறுமியே உயிரிழந்துள்ளார்.

6 அக்., 2013

இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை பெண்ணொருவர் பலி

இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் பிரதேசத்தில் நேற்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
ஸ்பீட் வெல் மற்றும் மற்றும் பிரிக்பீல்ட்ஸ் வீதி சந்திக்கு அருகில் இந்த விபத்து நேற்று அதிகாலை 6.45 அளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் இலங்கையில் பிறந்த 55 வயதான முத்துமனக்கா பின்ஹாமி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

புகைப்படத்தை பார்த்து கொலையா விபத்தா என்பதை தீர்மானியுங்கள் ( படங்கள் இணைப்பு)

இரண்டு பிள்ளைகளின் தந்தை செல்வராசாசிங்கம்.கஜந்தன் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் மர்மமான முறையில் இறந்து கிடக்க காணப்பட்டார். போக்கறுப்பு கேவிலிருந்து நேற்றிரவு 8மணியளவில் அம்பன் பகுதியில் மணல் ஏற்றுவதற்காக தனது உழவு இயந்திரத்தில் புறப்பட்டு சென்றார் என்று அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சிங்க கொடி சம்பந்தனுக்கும் சிங்கள சம்பந்தி விக்கிக்கும் செருப்படி கொடுக்க இருக்கும் அனந்தி

தமிழின துரோகி சிங்க கொடி சம்பந்தனுக்கும் சிங்கள சம்பந்தி விக்னேஸ்வரனுக்கும் வடமாகாணசபை தேர்தலில் அதி கூடிய வாக்கு பெற்ற அனந்தி எழிலன் செருப்படி கொடுக்க உள்ளார்.  

ad

ad