புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 அக்., 2013

நவிபிள்ளையின் யோசனைக்கு அமைய மாகாண மற்றும் உள்ளூராட்சி சபைகளின் பிரதிநிதிகளுக்கு மனித உரிமை கல்வித்திட்டம்
மாகாண சபை, உள்ளூராட்சி சபைகளின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு மனித உரிமைகள் தொடர்பான கல்வித்திட்டம் ஒன்றை நடத்த இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதிநிதிகளை சந்தித்து இவ்வாறான யோசனை ஒன்றை முன்வைத்திருந்தார்.
அவரது யோசனைக்கு அமைய மக்களுக்கு இருக்கும் மனித உரிமைகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த கல்வித்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்தார்.
முக்கியமாக வடக்கில் புதிதாக ஸ்தாபிக்கப்பட உள்ள மாகாண சபையின் மக்கள் பிரதிநிதிகளுக்கு மனித உரிமைகள் தொடர்பில் தெளிவுப்படுத்துவது குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கவனம் செலுத்தி வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

ad

ad