புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 அக்., 2013





கொரியன் பார்முலா 1 கார்பந்தயம்: செபாஸ்டியன் வெட்டல் முதலிடம்

பார்முலா1 கார் பந்தயம் மொத்தம் 19 சுற்றுகளை கொண்டதாகும். இதன் 14–வது சுற்றான கொரியன் கிராண்ட்பிரீ பந்தயம் அங்குள்ள யோன்காமில் உள்ள ஓடுதளத்தில் இன்று நடந்தது. 309 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த
பந்தயத்தில் 22 வீரர்கள் பங்கேற்று மின்னல் வேகத்தில் காரில் சீறிப்பாய்ந்தனர். பரபரப்பாக அமைந்த இந்த போட்டியில் ஜெர்மனி வீரரும், நடப்பு சாம்பியனுமான செபாஸ்டியன் வெட்டல் (ரெட்புல் அணி) 1 மணி 43 நிமிடம் 13.701 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார். அவரை விட 4.22 வினாடிகள் பின்தங்கிய பின்லாந்து வீரர் கிமி ரெய்க்கோனன் (லோட்டஸ் அணி ) 2–வதாகவும், 4.92 வினாடிகள் தாமதித்த பிரான்ஸ் வீரர் குரோஸ்ஜின் (லோட்டஸ்) 3–வதாகவும் வந்தனர்.
வெட்டல் இந்த ஆண்டில் வென்ற 8–வது வெற்றி இதுவாகும். இதுவரை நடந்துள்ள 14 சுற்றுகள் முடிவில் செபாஸ்டியன் வெட்டல் 272 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்திலும், ஸ்பெயின் வீரர் பெர்னாண்டோ அலோன்சா (பெராரி அணி) 195 புள்ளிகளுடன் 2–வது இடத்திலும், ரெய்க்கோனேன் 167 புள்ளிகளுடன் 3–வது இடத்திலும் உள்ளனர். இரண்டாவது இடத்தில் உள்ள வீரரை விட 77 புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ள செபாஸ்டியன் வெட்டல் சாம்பியன்ஷிப் பட்டத்தை சுவைத்து விடும் தூரத்தை நெருங்கி விட்டார். அனேகமாக வருகிற 13–ந்தேதி நடக்கும் 15–வது சுற்றான ஜப்பான் கிராண்ட்பிரீ பந்தயத்தின் போது, தனது 4–வது பார்முலா1 உலக சாம்பியன்ஷிப் மகுடத்தை அவர் உறுதி செய்து விட பிரகாசமான வாய்ப்புள்ளது.

ad

ad