புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 நவ., 2013

காமன்வெல்த் மாநாட்டுக்கு செய்தி சேகரிக்கச் சென்ற பிபிசியின் வீடியொ செய்தியாளர் குழு, அங்கு படம்பிடிப்பதில் சிக்கல்களைச் சந்தித்துள்ளது.

மாநாட்டு வைபவத்தில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை படம்பிடிக்க அவர்கள் அருகில் செல்ல முயல, இலங்கை அதிகாரிகள் எமது செய்தியாளர் குழுவை தடுத்துள்ளார்கள்.

எங்கள் ஊடக சுதந்திரத்தில் ஏன் தலையிடுகின்றீர்கள் என்று எமது செய்தியாளரான ஜேம்ஸ் றொபின்ஸ் திரும்பத் திரும்பக் கேட்டும் இலங்கை அதிகாரிகள் அவர்களை தடுத்துள்ளார்கள்.

இது குறித்த காணொளியை நேயர்கள் இங்கு காணலாம்.

இன்றைய மூன்றாம் நாள் போராட்டத்திலும் பல்வேறு அச்சுறுத்தல்களையும் தாண்டி நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கஜதீபன், சித்தார்த்தன், ஆகியோரும் , பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , செ.கஜேந்திரன் எனப்பலர் கலந்து கொண்டுள்ளனர்.

அதிமுக பிரமுகரை ஓட ஓட விரட்டி கொல்ல முயற்சி; அதிர வைக்கும் காட்சிகள் (வீடியோ இணைப்பு)
மதுரை மேலூரைச் சேர்ந்த அ.தி.மு க பிரமுகர் பாஸ்கரன். இவர் அதிமுகவில் அம்மா பேரவை என்ற அணி தோன்றுவதற்கு முக்கியமானவர்களில் ஒருவர் இவர் மீது கட்சியில் பல்வேறு அதிருப்திகள் இருந்து வந்ததால் அக்கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டவர்.
தெற்காசிய ஜூனியர் தடகளம்: பதக்கப்பட்டியலில் இந்தியா முதலிடம்
ஜார்க்கண்ட் மாநி லத்தில் நடைபெற்ற தெற்காசிய அளவிலான ஜூனியர் தடகளப் போட் டியில் 52 பதக்கங்களைக் குவித்து இந்தியா முத லிடம் பிடித்தது.

வைகோ, சீமான் மீது கைது நடவடிக்கை இல்லை!
தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்புக்கு எதிர்ப்பு காட்டிய விவகாரத்தில் பழ.நெடுமாறன்  உட்பட 83 பேர்  கைது செய்யப்பட்டு, கீழ வாசலில் உள்ள மக்கள் மன்றத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.
பழ.நெடுமாறன் மீது வழக்கு - நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை
தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம் விவகாரத்தில் பழ.நெடுமாறன் மீது வழக்குப் பதிவு செய்யட்டுள்ளது.


தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவர் புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறி இன்று சுவர் இடித்து தள்ளப்பட்டது.
பழ.நெடுமாறன் உள்ளிட்ட 83 பேர் திருச்சி சிறையிலடைப்பு

தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்புக்கு எதிர்ப்பு காட்டிய விவகாரத்தில் உலக தமிழர் பேரவை அமைப்பினர் பழ.நெடுமாறன், அயனாவரம் முருகேசன், பொன்னிறைவன், பொன்.வைத்தியநாதன்
தொலைக்காட்சி விவாதத்தில் விபரீதம் உண்டாக்கிய நேயர் :
டிவி அதிபர் வீட்டில் போலீஸ் நுழைந்தது
சத்யம் தொலைக்காட்சியில் இன்று இரவு ‘’சத்யம் - அது சாத்தியம்’’நிகழ்ச்சி 8.10 மணியில் இருந்து 8.30 மணி வரை சென்றது.  முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அகற்றியது சரியா? தவறா? என்ற விவாதம்
பிரிட்டன் பிரதமர் கமருனுக்கு இலங்கை ஊடக அமைச்சர் கண்டனம்! நாட்டின் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்பட மாட்டாது!– அரசாங்கம் [ பி.பி.சி ]

இலங்கை ஜனாதிபதி இதைச் செய்யவேண்டும், அதைச்செய்ய வேண்டும் என்று கூற, கொமன்வெல்த் உச்சி மாநாட்டுக்கு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமருன் அழைக்கப்படவில்லை என்று இலங்கை அரசு தெரிவித்திருக்கிறது.
இலங்கை அரசாங்கத்தின் சூழ்ச்சி வெற்றி: கொழும்பு திரும்பினார் கெலும் மக்ரே
சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அநுராதபுரம் புகையிரத நிலையத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தினைத் தொடர்ந்து அவர்களின் வவுனியா பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

13 நவ., 2013

கமரூனைச் சந்திக்க மறுப்பு தெரிவித்த ஜனாதிபதி மகிந்த: விடாபிடியில் பிரித்தானியா
பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனை சந்திக்க ஜனாதிபதி மகிந்த இணக்கம் தெரிவிக்கவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
இசைப்பிரியாவின் காணொளி குறித்து உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும்! தீபக் ஒப்ராய் வலியுறுத்து
சனல் - 4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட இசைப்பிரியாவின் காணொளி தொடர்பில் உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும். என்று கனேடிய வெளிவிவகார அமைச்சு மற்றும் சர்வதேச மனித உரிமை விவகார நாடாளுமன்றச் செயலர் தீபக் ஒப்ராய்
கமரூனின் பாதுகாப்பு குறித்து உறுதி செய்து கொள்ள பாதுகாப்பு செயலக குழுவினர் யாழ்.விஜயம்
பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வரவுள்ள பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன், யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்யவுள்ளார்.
ஸ்ரீகொத்தாவிற்கு அருகில் பதற்றம்! ரணிலின் வாகனத்தின் மீது தாக்குதல்- படையினரே தாக்குதல் நடத்தினர்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவிற்கு அருகில் பதற்றம் நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்திற்கு ஆதரவானவர்களே எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலுக்கு இலங்கைக்கு ஆதரவான சீனா, ரஷ்யா உட்பட 14 நாடுகள் தேர்வு
ஜெனிவாவை தலைமையிடமாக கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் இயங்கி வருகிறது.
சனல்4 ஊடகவியலாளர் கெலும் மக்ரேவிற்கு சாவேந்திர சில்வா சவால்
சனல்4  தொலைக்காட்சியின்் ஊடகவியலாளர் கெலும் மக்ரேவிற்கு, மேஜர் ஜெனரல் சாவேந்திர சில்வா சாவல் விடுத்துள்ளார்.
கொழும்பு சூதாட்ட மையத்துடன் அமைச்சர்களின் மனைவியருக்கு உண்டான தொடர்பு அம்பலப்படுத்தப்பட வேண்டும்
அண்மையில் கொழும்பில் சுற்றி வளைக்கப்பட்ட சூதாட்ட மையத்துடன் அமைச்சர்களின் மனைவியருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இது தொடர்பில் அரசாங்கம் அம்பலப்படுத்தப்பட வேண்டுமென கூட்டணி கட்சியான ஜாதிக ஹெல உறுமய கோரியுள்ளது. 
வடமாகாண உறுப்பினர் ரவிகரனுடன் கொழும்பு சென்ற மக்களை பலவந்தமாக திருப்பியனுப்பிய இராணுவம்
கொழும்பில் மனித உரிமை ஆர்வலர்கள் ஏற்பாட்டில் நடைபெற இருந்த மனித உரிமைகள் தொடர்பிலான கண்காட்சி நிகழ்வில் கலந்து கொள்வதற்கு வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுடன், சென்றிருந்த காணாமல் போனோரின் உறவினர்கள் மதவாச்சியில் வைத்து தடுக்கப்பட்டு பலவந்தமாக
புலிகள் செய்த போர் குற்றங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்!- கெலும் மக்ரே
இலங்கை இராணுவத்திற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர் குற்றங்கள் தொடர்பாக மட்டுமே விசாரணை நடத்த வேண்டும் என தாம் கூறவில்லை, விடுதலைப்புலிகள் மேற்கொண்ட போர் குற்றங்கள் தொடர்பிலும் உடனடியாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்  என சனல் 4 தொலைக்காட்சியின்

ad

ad