புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 நவ., 2013

ஸ்ரீகொத்தாவிற்கு அருகில் பதற்றம்! ரணிலின் வாகனத்தின் மீது தாக்குதல்- படையினரே தாக்குதல் நடத்தினர்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவிற்கு அருகில் பதற்றம் நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்திற்கு ஆதரவானவர்களே எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவின் வாகனத்தில் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீகொத்தாவிற்கு அருகில் நடத்தப்படும் அரச ஆதரவு ஆர்ப்பாட்டகாரர்களினாலேயே தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்க ஆதரவானவர்களே இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவரின் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்திய சிவில் உடையில் இருந்த படையினர்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் சிறிகொத்த எதிரில் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.
ஐக்கிய தேசியக் கட்சி மனித உரிமை மாநாடு ஒன்றை நடத்த தயாராகி இருந்துடன் காணாமல் போன நபர்களின் உறவினர்களும் அதில் கலந்து கொள்கின்றனர்.
கட்சியின் தலைமையகத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கு சென்ற எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் வாகனத்தின் மீதும் தாக்குதல் நடத்தினர்.
இதனையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு இடையில் மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் சிவில் உடையில் இருந்த இராணுவத்தினரே எதிர்க்கட்சித் தலைவரின் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
அவரது பாதுகாவலர்கள் உடனடியாக தலையிடாது போயிருந்தால், எதிர்க்கட்சித் தலைவரின் வாகனத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டு அவர் தாக்கப்பட்டிருக்கலாம் என எதிர்க்கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
சுமார் 400 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்துடன் அவர்கள் அமைச்சுகளுக்கு சொந்தமான வாகனங்களில் அழைத்து வந்து இறக்கப்பட்டனர். இவர்களில் பனாகொட இராணுவ முகாமில் பணியாற்றும் இராணுவத்தினரும் சிவில் உடையில் காணப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.

ad

ad