புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 நவ., 2013

இலங்கை அரசாங்கத்தின் சூழ்ச்சி வெற்றி: கொழும்பு திரும்பினார் கெலும் மக்ரே
சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அநுராதபுரம் புகையிரத நிலையத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தினைத் தொடர்ந்து அவர்களின் வவுனியா பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விசேட வாகனத்தில் சனல் 4 ஊடகவியலாளர்களின் கொழும்புக்கு திரும்பியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
சனல் 4 ஊடகவியலாளர்கள் பயணித்த ரயிலை அநுராதபுரத்தில் வழிமறித்த சிலர் ரயில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினர்.
அவர்கள் வவுனியா செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அதிக நேரம் ரயிலின் உள்ளேயே இருந்த சனல் 4 ஊடகவியலாளர்கள் பாதுகாப்புக் காரணமாக பின்னர் கொழும்புக்கு திருப்பி அனுப்பப்பட்டனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்தி
மக்ரேவுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டிருக்கும்- அமைச்சர் கெஹெலிய
சனல் 4 ஊடகவியலாளர்கள் இலங்கைக்கு வந்திறக்கும்போது நாட்டில் பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தாம் எதிர்பார்த்திருந்ததாக கொழும்பில் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
பொதுமக்களால் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் சமாதானத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துமாக இருந்தால் அரசாங்கம் என்ற வகையில் சனல் 4 ஊடகவியலாளர்களை வடக்கிற்கு செல்ல விடாமல், அவர்களை பாதுகாப்பாக கொழும்புக்கு அழைத்து வருவதே சிறந்த விடயம் என்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.
இதேவேளை, கொழும்பில் இன்று இடம்பெற்ற இன்னொரு ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய பொதுபலசேனாவின் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், பொதுநலவாய மாநாட்டின் போது இந்தியா காட்டிய இராஜதந்திர நடவடிக்கையை இலங்கையால் ஏன் வெளிக்காட்டமுடியவில்லை என்று கேட்டார்.
பொதுபல சேனாவின் அரசாங்கமாக இருந்திருந்தால் சனல் 4 வின் மெக்ரே போன்றவர்களை கட்டுநாயக்கவில் அல்லது ஹம்பாந்தோட்டை விமான நிலையங்களில் தரையிறங்க விட்டிருக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.
எனவே, அவர்களை நாட்டில் இருந்து வெளியேற்றுமாறு ஞானசார தேரர் வலியுறுத்தியுள்ளார்.

ad

ad