புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 நவ., 2013

தெற்காசிய ஜூனியர் தடகளம்: பதக்கப்பட்டியலில் இந்தியா முதலிடம்
ஜார்க்கண்ட் மாநி லத்தில் நடைபெற்ற தெற்காசிய அளவிலான ஜூனியர் தடகளப் போட் டியில் 52 பதக்கங்களைக் குவித்து இந்தியா முத லிடம் பிடித்தது.

ராஞ்சியில் நடந்து முடிந்த 2ஆவது தெற்கா சிய ஜூனியர் தடகளப் போட்டியில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கன், நேபாளம் ஆகிய நாடு களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.
இப்போட்டி திங்கள் கிழமை தொடங்கியது. போட்டியின் முதல்நா ளில் இந்திய வீரரர்கள் 12 பதக்கங்கள் உள்பட 14 பதக்கங்களை வென் றனர்.
2ஆவது நாளான செவ் வாய்க்கிழமை நடை பெற்ற பல்வேறு போட் டிகளில் இந்திய வீரர் கள் மேலும் பதக்கங் களைக் குவித்தனர்.
இதனால் பதக்கப் பட்டியலில் 52 பதக்கங் களுடன் (20 தங்கம்; 16 வெள்ளி; 16 வெண்கலம்) இந்தியா முதலிடத்தைப் பிடித்தது.
இலங்கை வீரர்கள் 10 தங்கம் உள்பட 34 பதக் கங்களுடன் 2ஆம் இடத் தையும், 3 வெண்கலப் பதக்கங்களுடன் வங்க தேசம் 3ஆம் இடத்தை யும் பிடித்தன. பாகிஸ் தான் அணி ஒரே ஒரு வெண்கலப் பதக்கத்தை மட்டும் கைப்பற்றியது. போட்டியில் பங்கேற்ற ஆப்கன் மற்றும் நேபாள நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கு எந்தப் பதக் கமும் கிட்டவில்லை.
2015ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தெற்காசிய ஜூனியர் தடகளப் போட்டியை நடத்த இலங்கை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ad

ad