புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 நவ., 2013

இசைப்பிரியாவின் காணொளி குறித்து உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும்! தீபக் ஒப்ராய் வலியுறுத்து
சனல் - 4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட இசைப்பிரியாவின் காணொளி தொடர்பில் உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும். என்று கனேடிய வெளிவிவகார அமைச்சு மற்றும் சர்வதேச மனித உரிமை விவகார நாடாளுமன்றச் செயலர் தீபக் ஒப்ராய் நேற்று யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்தார்.
இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் கனேடியப் பிரதமர் கலந்து கொள்ளவில்லை.
அவருக்குப் பதிலாகப் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க இலங்கை வந்துள்ள தீபக் ஒப்ராய் நேற்றுச் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு உதயன் பத்திரிகைக்கு  வழங்கிய விசேட செவ்வியின் போதே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு கனடா தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தும்.
நாங்கள் பொதுநலவாயத்தின் விழுமியங்களில் அக்கறையாக இருக்கின்றோம். பொதுநலவாயத்தின் முக்கிய விழுமியமான பேச்சுச் சுதந்திரம் மற்றும் எழுத்துச் சுதந்திரத்தில் அக்கறையாக இருக்கின்றோம். அவற்றின் நிலைமைகள் இலங்கையில் எப்படியிருக்கின்றது என்பதைப் பார்க்கவே இங்கு வந்துள்ளேன். 
ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் தாக்கப்படும் சம்பவங்களில் இலங்கை அரசு பொறுப்புடன் நடக்கவில்லை. உதயன் பத்திரிகை நிறுவனத்தின் மீதான தாக்குதல்கள் தொடர்பில் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாமை எனக்கு அதிருப்தியையும் ஆச்சரியத்தையும் அளிக்கின்றது.
ஊடகங்கள் மீதான தாக்குதல்களுக்கு அரசு பொறுப்புக் கூற வேண்டும். ஊடகங்களைப் பாதுகாக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக இலங்கை அரசு அவ்வாறு செயற்படவில்லை. இதனை ஆழ்ந்த கரிசனைக்குரிய விடயமாக இலங்கை அரசிடம் சுட்டிக் காட்டுவோம். 
சனல்-4 தொலைக்காட்சி அண்மையில் வெளியிட்ட இசைப்பிரியாவின் காணொளியைப் பார்த்தேன். ஐ.நா.மனித உரிமைகள் சபையில் இவ்வாறான விடயங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முன்னரே வலியுறுத்தப்பட்டுள்ளது. அதை நாம் தொடர்ந்து வலியுறுத்துவோம். அது எங்களின் கொள்கை.
இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும். தென்னாபிரிக்காவில் எவ்வாறு நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்காக உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அமைக்கப்பட்டதோ, அதனை முன் மாதிரியாகக் கொண்டு இலங்கை செயற்பட வேண்டும் என்றார்.
இலங்கை தொடர்பான கேள்விகளுக்கு விடைகாணும் பொறுப்பு கனடாவிற்கு உண்டு- தீபக் ஒபராய்
இலங்கை தொடர்பான கேள்விகளுக்கு விடைகாணும் பொறுப்பு கனடா அரசாங்கத்திற்கு உண்டு. அதற்காகவே கனேடிய பிரதமரின் பிரதிநிதியாக இலங்கைக்கு வந்துள்ளேன் என கனேடிய வெளிவிவகார அமைச்சு மற்றும் சர்வதேச மனித உரிமை விவகார நாடாளுமன்றச் செயலர் தீபக் ஒப்ராய் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கனடாவின் பிரதமர் ஸ்ரிபன் ஹாபர் இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டினை புறக்கணித்துள்ளார். ஆனால் அவர் சார்பாகவே இலங்கைக்கு நான் வந்துள்ளேன்.
கொழும்பிற்கு வந்து அங்கிருந்து ஏ-9 வீதியாலேயே யாழ்ப்பாணத்திற்கு நாங்கள் வருகைதந்தோம்.
இங்கு வந்து நேரடியாக நிலைமைகளை அவதானித்து பல்வேறு விடயங்களை அறிந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்.
இதேவேளை யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கும் ஆனையிறவுப் பகுதியில் வைத்து கனேடிய வெளிவிவகார அமைச்சு மற்றும் சர்வதேச மனித உரிமை விவகார நாடாளுமன்றச் செயலர் தீபக் ஒப்ராய் அஞ்சலி செலுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ad

ad