புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 நவ., 2013

வடக்கு இராணுவ ஆளுநருக்கும் மாகாண சபைக்கும் முறுகல் வெடித்தது! ஆளுநரின் சர்வாதிகாரம் என குற்றச்சாட்ட
புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபையுடன் இணங்கிச் செயற்படாமல் மாகாண சபை விடயங்களில் இராணுவ ஆளுநர் தன்னிச்சையான முடிவுகளை மேற்கொண்டு வருவதால் அவருக்கும் மாகாண சபைக்கும் இடையேயான முறுகல் நிலை நேற்று வெளிப்படையாக வெடித்தது.
மாவீரர்களுக்கு கரவெட்டி பிரதேச சபையில் அஞ்சலி செலுத்தப்பட்டது! அஞ்சலி செலுத்திய விஜேநேசன் கைது
மாவீரர்களுக்கான அஞ்சலி கரவெட்டி பிரதேச சபையில் இன்று திங்கட்கிழமை செலுத்தப்பட்டுள்ளது.அனைத்துலக பெண்கள் கொடுமை தினமான இன்று அதனை அனுஷ்டிப்பதற்கான நிகழ்வு பிரதேச சபை தவிசாளர் சு.வியாகேசு தலைமையில் கரவெட்டி பிரதேச சபை

யாழில் இருந்து வேலணைப்பாலம் ஊடாக பயணம் செய்வதில் சிரமம்!

புங்குடுதீவு வேலணைப் பாலம் கடந்த பல வருட காலமாக புனரமைக்கப்படாமலுள்ளதால் இந்தப் பாலத்தினூடாகப் போக்குவரத்துச் செய்கின்ற பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். (படங்கள்)

தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் 59 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சென்னை மாணவர்கள்!



 
 தமிழீழ தேசிய் தலைவர் அவர்களின் 59 ஆவது பிறந்த நாளினை தமிழர்கள் அனைவரும் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் இன்று சென்னை பல்கலைக்கழகத்தின் விடுதியில் மாணவர்கள் கேக் வெட்டி மாணவர்களுடன் பரிமாறி கொண்டாடியுள்ளார்கள்.
சிறிலங்கா குறித்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை – குத்துக்கரணம் அடித்தது சீனா

சிறிலங்கா தொடர்பான தமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது என்று சீனா கூறியுள்ளது.
அண்மையில், பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளிவகார அமைச்சின் பேச்சாளர், மனிதஉரிமைகளைப் பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும், சிறிலங்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். 
இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையை தடுக்க முடியாது – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தமிழ் மக்கள் மாவீரர் நாளை நினைவு கூருவதை தடுக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகளை தாம் கடுமையாக எதிர்ப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மாவீரர் நாளை நினைவு கூருவது சட்டவிரோதமானது என்று சிறிலங்கா அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை குறித்து கருத்து
மாவீரர்களை நினைவு கூருவதற்கு சிறிலங்கா இராணுவம் தடை

விடுதலைப் புலிகளை நினைவு கூருவதற்கு சிறிலங்கா இராணுவம் தடைவிதித்துள்ளது. நாளை மாவீரர் நாள் நினைவு கூரப்படவுள்ள நிலையில், சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 
பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரி தாயார் அற்புதம்மாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மனு!
பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரி அவரது தாயார் அற்புதம்மாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார்.
<iframe width="560" height="315" src="//www.youtube.com/embed/kfO3HhWSlZU" frameborder="0" allowfullscreen></iframe>
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 59ஆவது பிறந்த நாள் நிகழ்வுகளில் தாயக, புலம்பெயர் மற்றும் தமிழக மக்கள் சிறப்புறக்கொண்டாடி வருகின்றனர்.
கேக் வெட்டி, சிற்றுண்டிகளைப் பரிமாறியும், பரஸ்பரம் வாழ்த்துக்களைத் தெரிவித்தும் தலைவர் பிரபாகரன் அவர்களுக்காக வாழ்த்துத் தெரிவிக்கும் நிகழ்வுகள் கடந்த நள்ளிரவு 12.00 மணி முதல் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் கேக் வெட்டி, சிற்றுண்டிகளைப் பரிமாறி தேசியத் தலைவர் அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து மகிழ்ந்தனர்.
thalaivar
1481128_550416425041915_1182745309_n

25 நவ., 2013

மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக முத்தையாக முரளிதரன் தெரிவாவாரா ?அவரது சகோதரர் ஒருவர் சிறைச் செல்வதை தடுப்பதற்காவே முரளி அரசுடன் கைகோர்க்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
எதிர்வரும் மேல் மாகாண சபைத்தேர்தலில் ஆளும் கட்சியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட வைக்கும் நோக்கத்தில் ஜனாதிபதி தேடிய பிரபலமான நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஒருவர் கிடைத்துள்ளதாக தெரியவருகிறது.
உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் : மதுரை ஆதீனத்தின் உதவியாளர் வைஷ்ணவி கமிஷனரிடம் புகார்
மதுரை ஆதீனத்தின் தனி உதவியாளர் வைஷ்ணவி. கடந்த ஓராண்டுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடபெற்றது.  திருமணத்திற்கும் பிறகும் உதவியாளராக நீடித்து வருகிறார்.
சென்னையில் 8வது மாடியில் இருந்து குதித்து பெண் மரணம்சென்னையில் பரபரப்பான மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள கட்டிடத்தில் 8வது மாடியில் இருந்து குதித்த பெண் ஊழியர் ராஜலட்சுமி பலியானார்.     பட்டதாரியான இவர் அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர்.  உடலை கைப்பற்றிய போலீசார் தற்கொலை குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
யாழ்ப்பாணம் சிறையில் இருந்து 15 தமிழக  மீனவர்கள் விடுதலை
புதுக்கோட்டை, ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் கடந்த அக்டோபர் மாதம் 14ம் தேதி இலங்கை கடற்படை யினால் சிறைபிடிக்கப்பட்டனர். சிறைபிடிக்கப்பட்ட 15 மீனவரையும் விடுதலை செய்தது ஊர்க்காவல் நீதிமன்றம்.இதையடுத்து இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் இருந்து  மீனவர்கள் 15 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
சுவிசின் நெடுஞ்சாலை கட்டணம் உயராது -தேர்தலில் வாக்களிப்பு 

இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் சுவிசின் அதி வேக நெடுஞ்சாலை கட்டணம் வருடத்துக்கு 40 இல் இருந்து 100 பிராங்காக உயர்த்தும் சட்டத்துக்கு மக்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர்.ஐரோப்பாவிலும் சுவிசிலும் ஜெர்மனியிலும் நெடுஞ்சாலைகளுக்கு தூரங்களுக்கான கட்டணம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.இருந்தாலும் சுவிசில் வருடம் ஒன்றுக்கு 40 பிரான்க் அறவிடப்பட்டு வருகிறது 

சுவிட்சர்லாந்தில் சர்வதேச மன்னிப்புச்சபை காண்பித்து வரும் சனல் 4 ஆவணப்படம்

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு நீதி கோரி, சர்வதேச மன்னிப்புச் சபை உலகளாவிய ரீதியில் நடாத்திவரும் தொடர் பரப்புரையின் ஒரு அங்கமாக சுவிஸ் நாட்டில் சனல்- 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட
போர்முலா ஒன்று கார் பந்தய சாம்பியனாக இந்த அவருடம் விட்டல் தெரிவாகி உள்ளார் .இந்த வருடம் நடை பெற்ற இருபது சுற்றுக்களில் இவர் பதின்மூன்று சுற்றுக்களில் முதலாம் இடத்து உள்ளார் . இறுதியாக நடந்த ஒன்பது போட்டிளில் தொடர்ந்து முதலாம் இடத்தை  அடைந்ததனால் 2004இல் சூமாக்கர் சாதித்த சாதனையை எட்டி பிடித்துள்ளார் இவரது வாகனமான ரெட் புல் உம வாகன சம்பியனானது .இன்றைய பிரேசில் சாவோ பாலோ சுற்றி வென்றுள்ளார் .
டேவிஸ் கோப்பை: செக் குடியரசு அணி மீண்டும் சாம்பியன்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் செக் குடி யரசு அணி 3-2 என்ற புள் ளிக் கணக்கில் செர்பி யாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்தது.
புதிய உலக சாம்பியன் கார்ல்ஸென்
சென்னை, நவ.23-  அய்ந்து முறை உலக செஸ் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்தை அவரது சொந்த மண்ணிலேயே வீழ்த்தி, புதிய உலக சாம்பியனாகியுள்ளார். நார்வேயின் கார்ல் ஸென்.
பெய்ரூட், நவ. 24- சிரியாவின் மிகப்பெரிய நகரமான அலெப்போ நகருக்கு அருகில் போராளிகள் வசமுள்ள இரண்டு மாவட்டங்களில் அதிபர் ஆசாத்தின் போர் விமானங்கள் நேற்று குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதல் மூன்று முறையாக நடத்தப்பட்டன. இதில் அல் பாப் பகுதிகளில் ஜெட் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் 22 பேர் கொல்லப்பட்டனர் என்று பிரிட்டன் மனித உரிமை அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

ad

ad