புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 நவ., 2013

சுவிட்சர்லாந்தில் சர்வதேச மன்னிப்புச்சபை காண்பித்து வரும் சனல் 4 ஆவணப்படம்

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு நீதி கோரி, சர்வதேச மன்னிப்புச் சபை உலகளாவிய ரீதியில் நடாத்திவரும் தொடர் பரப்புரையின் ஒரு அங்கமாக சுவிஸ் நாட்டில் சனல்- 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட
போர் தவிர்ப்பு வலயம் என்ற ஆவணப்படம் பல்வேறு இடங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றது.
அதன் ஒரு அங்கமாக அண்மையில் லவுசான் மாநகரில் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டது.
பிரெஞ்சு மொழிபேசும் பிராந்தியத்திற்கான தமிழ்ச் சங்கத்தின் ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் சங்கத்தின் பொதுச் செயலாளரும் லவுசான் மாநகரசபை உறுப்பினருமான தம்பிப்பிள்ளை நமசிவாயம், சர்வதேச மன்னிப்புச் சபையின் இலங்கைப் பரப்புரைப் பிரிவின் இணைப்பாளர் பற்றிக் வால்டர், சர்வதேச மன்னிப்புச் சபையின் சுவிஸ் கிளைத் தலைவி மனோன் சிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேவேளை, இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு எதிராக பக்கச் சார்பற்ற நீதியான விசாரணை நடாத்தப்பட வேண்டும், தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்களைத் திருப்பி அனுப்புவதை இடைநிறுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து சேகரிக்கப்பட்ட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கையெழுத்துக்களை எதிர்வரும் நாளைமறுதினம் வியாழக்கிழமை சுவிஸ் வெளிநாட்டு அமைச்சிடம் கையளிப்பதற்கு சர்வதேச மன்னிப்புச் சபை தீர்மானித்துள்ளது.
பிற்பகல் 1:30 மணிக்கு பேர்ண் பாராளுமன்றத்துக்கு முன்பாக உள்ள மைதானத்தில் நடைபெறும் ஒன்றுகூடலைத் தொடர்ந்து இந்தக் கையளிப்பு நிகழ்வு நடைபெற உள்ளதால் ஆர்வமுள்ள தமிழ் மக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்

ad

ad