புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 பிப்., 2014


வடக்கில் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடிய வகையில் ஆறு ஆயுதக் குழுக்கள் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புலனாய்வுப் பிரிவினர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.உடற்பயிற்சி நிலையம் என்ற பெயரில் பாரிய வீடுகளை வாடகைக்கு அமர்த்தி இந்தக் குழுக்கள் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டு வருகின்றன.
ஜெனீவா தீர்மானம் குறித்து அமைச்சர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டின் போது இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் குறித்து இந்த அறிக்கையில் குறிப்பிடப்படவுள்ளது.
நள்ளிரவு அல்லது அதிகாலையில் வெளிச்சங்களை பாய்ச்சியவாறு வீடுகளுக்குள் நுழைந்தவர்கள் எங்கள் பிள்ளைகளை விசாரணைக்கென கூறி அழைத்துச் சென்றார்கள்நெஞ்சை உருக்கும் கண்ணீர் கதைகள்
யாழ்.குடாநாடு படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட நிலையில் படையினர் சீருடையுடன் ஆயுதங்கள் தாங்கியவாறு எங்கள் வீடுகளுக்குள் நுழைந்து எங்களை தாக்கிவிட்டு பிள்ளைகளை கொண்டு சென்றனர்.
அவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்கள் எங்கே? எங்கள் பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள் என காணாமல்போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக நேற்றும் உறவினர்கள் கண்ணீர்மல்க சாட்சியமளித்துள்ளனர்.
ஆணைக்குழுவின் 2ம் அமர்வு நேற்றய தினம் சாவகச்சேரி பிரதேச செயலர் அலுவலகத்தில் நடைபெற்றிருந்தபோதே மக்கள் மேற்படி சாட்சியத்தினை கண்ணீர்மல்க வழங்கியிருக்கின்றனர்.
சாட்சியத்தில் மக்கள் கூறுகையில்,

முள்ளிவாய்க்காலில் கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவரான யோகரத்தினம் யோகி இராணுவத்தினரிடம் சரணடைந்ததாக அவரது மனைவியினால் இன்று ஆணைக்குழுவிடம் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்க மதகுரு பிரான்ஸிஸ் ஜோசப் முன்னிலையில் இராணுவத்தினரிடம் தனது கணவன் உட்பட பல போராளிகள் சரணடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

சீனி சர்க்கரை சித்தப்பா, ஏட்டில் எழுதி நக்கப்பா! ஜெ. அரசை விளாசி தள்ளிய மு.க.ஸ்டாலின்!

திமுகவின் 10வது மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது. இரண்டாவது நாளானஞாயிற்றுக்கிழமை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,
இரண்டு நாட்களுக்கு முன்பு கடந்த
கூட்டணி குறித்து விரைவில் முடிவு: விஜயகாந்த்

டெல்லியில் இருந்து திரும்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர்,

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். தமிழக மக்கள் மற்றும் மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசியதாக கூறினார்.

தேமுதிக எம்எல்ஏக்கள் பிரதமரை சந்தித்ததற்கான காரணம் எனக்கு புரியவில்லை: இல.கணேசன்
பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
சட்டமன்றத்தில் பேச வாய்ப்பில்லை என்று சொன்னால் அதிமுகவோடு இருந்து என்ன பலன்: கிருஷ்ணசாமி பேச்சு
திமுகவின் 10வது மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது. இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி பேசுகையில்,

எந்த ஒரு செயலுக்கும் காலம் முக்கியம் என்று சொல்லுவார்கள். இந்த மாநாட்டை ஒரு மாதத்திற்கு முன்பு கூட்டியிருந்தாலும் சிறப்பு இருந்திருக்காது. ஒரு மாதம் கழித்து கூட்டியிருந்தாலும் முக்கியத்துவம் இருக்காது. இதுதான் சரியான தருணம். ஏனென்றால், இம்மாத இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. 
கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்தோம். மூன்று வருடத்தில் ஒரு மாற்று முடிவு எடுக்கும் சூழல் ஏன் வந்தது. ஆளும்கட்சி கூட்டணியில் இருந்து யாரும் வெளியே வரமாட்டார்கள். வரக்கூடிய சூழ்நிலை உருவாகாது. நானும், மனித நேய மக்கள் கட்சியும் ஒரு முடிவு

மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை கைது!
 
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்தவர் பாலசுப்ரமணி (53). ஆட்டோ ஓட்டுனரான இவரது மனைவி ஆரோக்யமேரி. இவர்களுக்கு 12 வயதில் சகாய மேரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது)
மதவாதத்தை எதிர்ப்பவர்கள் தி.மு.க, கூட்டணிக்கு வருவார்கள்: கலைஞர் பேச்சு
 திமுகவின் 10வது மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது. இரண்டாவது நாளானஞாயிற்றுக்கிழமை திமுக தலைவர் கலைஞர் பேசுகையில்,
முக்கியமான நேரத்தில் மாநாடு நடைபெற்றுள்ளது.
டெல்லி மாநில அரசு தான் எனது நோக்கம்; அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி
ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
காங்கிரசை நம்ப வேண்டாம் என்று மக்கள்

வெளிநாட்டு நிதிக்கான ஆதாரத்தை கேஜ்ரிவால் வெளியிடவில்லை: ஷிண்டே பேட்டி
ஆம் ஆத்மி கட்சிக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த நன்கொடைகள் குறித்த தகவல்களை அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவிக்கவில்லை என்று மத்திய
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பெரும் ஊழல் புரிந்தது மன்மோகன் சிங் அரசுதான்: அத்வானி குற்றச்சாட்டு
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பிரதமர் மன்மோகன் சிங்கின் 10 ஆண்டு கால அரசு பெரும் ஊழல் புரிந்துள்ளது என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி சாடியுள்ளார்.

16 பிப்., 2014

காதல் தோல்வி?- காதலன் தற்கொலை!- யாழில் சம்பவம்
இன்று காலை யாழ். மானிப்பாய் வீதி, ஓட்டுமடம் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு மாணவனை கார் ஓட்ட விட்ட பெற்றோர்; விபத்தில் குடும்பமே பலி 
திருப்பூர் நகரிலுள்ள காந்தி நகர் ஆஷர் மில் 2வது வீதியை சேர்ந்தவர் துரைசாமி (49). இவர் திருப்பூரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவரது மனைவி சிவகாமி (40). இவர்களது ஒரே மகன் செல்வவேல் (16). தாராபுரத்தில் உள்ள பள்ளியில்

1.5 வயது தங்கையுடன் 68 மைல்கள் காரை ஓட்டிச் சென்ற 10 வயது நார்வே சிறுவன்

நார்வேயில் 10 வயது சிறுவன் ஒருவன் நேற்று காலை 6 மணிக்கு தனது பெற்றோர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு தெரியாமல் தனது 1.5 வயது தங்கையையும்
ஐக்கிய நாடுகள் சபையின் 25 ஆவது மனித உரிமை மாநாட்டில் ஈழத் தமிழருக்கான நீதி கோரி தொடர் கவன ஈர்ப்புப் போராட்டம் 14.02.2014 அன்று ரொறன்ரோவில் இடம்பெற்றது.
மாலை 3:00 மணியளவில் British Consulate, Toronto, Bay & College St, Toronto, ON எனும் இடத்தில் ஆரம்பமான கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஏராளமான மக்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பதாதைகளை ஏந்தியவாறு பங்கேற்றனர்.

பாலுமகேந்திரா என்றொரு ஆளுமை

கண் முன் திரை இருக்கிறது. ஒலி காதில் கேட்கிறது. ஆக, சினிமா பார்த்து விட்டோம் என்று நம்பிக்கை கொண்டு மேற்பேச்சுக்கு செல்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது. அவர்களே பெரும்பான் மையாக இருந்துகொண்டும் இருப்பார்கள். மற்றபடி மிகக் குறைந்த எண்ணிக்கையில் என்றாலும் சினிமாவின் அழகியல் புரிந்து ரசனை உணர்வு கொள்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள். அத்தகையவர்களில் தமிழ் சினிமாவில் தவிர்த்து விட முடியாத பெயர் பாலு மகேந்திரா. 1946 ல் இலங்கையில் பிறந்த பாலு மகேந்திரா, 1969 ல் வட இந்தியா வின் புனே ஃபிலிம் இன்ஸ் டிடியூட்டில் ஒளிப்பதிவுத் துறை யில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவராக வெளிவந்தார். முதலில் மலையாளப் பட மான ‘நெல்லு’ வில் (1971),

சம்பந்தன் எதேச்சதிகாரமாம்: மாவை பதவி துறப்பு முயற்சி!

ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி-எழுதுகிறது அரச ஊடகம் ஒன்று 

பாராளுமன்ற கூட்டங்களின் போதும் கூட்டமைப்புக்குள் அங்கத்துவம் வகிக்கும் கட்சிக ளின் தலைவர்கள் சந்திப்பின் போதும், சம்பந்தனுக்கும், மாவைக்கும் இடையே அடிக்கடி கருத்து முரண் பாடுகள், மோதல்கள் வருவதுண்டு.

ad

ad