புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 பிப்., 2014


மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை கைது!
 
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்தவர் பாலசுப்ரமணி (53). ஆட்டோ ஓட்டுனரான இவரது மனைவி ஆரோக்யமேரி. இவர்களுக்கு 12 வயதில் சகாய மேரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது)
என்ற மகளும், 10 வயதில் 2 மகன்களும் உள்ளனர்.

பாலசுப்ரமனியின் மனைவி ஆரோக்கிய மேரி கடந்த 2010–ம் ஆண்டு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இந்த நிலையில், குழந்தைகளை பராமரிக்க முடியாததால் பாலசுப்ரமணி 3 குழந்தைகளையும் திருப்பூர் மாவட்டத்தில் அலகுமலையில் உள்ள குழந்தைகள் பசுமை பூங்காவில் சேர்த்துள்ளார்.
விடுதியில் உள்ள குழந்தைகளை அடிக்கடி வந்து பார்த்து சென்றுகொண்டு இருந்த பாலசுப்ரமணியம், கடந்த சில தினங்களுக்கு முன்பு காப்பகத்திற்கு வந்து காப்பகத்தின் மேலாளர் வியகுலமேரியிடம் மகளுக்கு மொட்டை போட வேண்டும். அதற்காக பழனிக்கு அழைத்து செல்கிறேன் என்று கூறி காப்பகத்தில் இருந்த மகளை அழைத்து சென்றுள்ளார்.
வெளியே சென்றதும், மகள் சகாயமேரியிடம், பழனி போவதற்கு முன்பாக உனக்கு புதுத்துணிகள் எடுத்துக்கொண்டு போகவேண்டும் என்று சொன்ன பாலசுப்ரமணி சகாயமேரியை திருப்பூர் காதர்பேட்டை பகுதிக்கு அழைத்து சென்றார்.
அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்ற பாலசுரமனியம், அங்கு வைத்து சகாயமேரியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமி தந்தையிடம் இருந்து தப்பி காப்பகத்துக்கு வந்து சேர்ந்துள்ளார். அங்கேயும், கடந்த 2 நாட்களாக அழுதுகொண்டு யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார்.
இதைப்பார்த்த மேலாளர் வியகுலமேரி சகாயமேரியிடம் விசாரித்துள்ளார்.  அப்போது தந்தை அழைத்து சென்று தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி அழுதுள்ளார். இதுகுறித்து காப்பக மேலாளர் வியகுலமேரி திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து பாலசுப்ரமணியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாணவிக்கு மருத்துவ பரிசோதனை நடத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ad

ad