புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூலை, 2014


சுவிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வு

வீரமிகு விடுதலைப்போரில் காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்கள் தரை, கடல், வான் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வான கரும்புலிகள் நாள் 06.07.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று பேர்ன் மாநிலத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர்.


சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன், தமிமீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈ

சுவிஸ் லுசேர்ணில் நடைபெற்ற தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள்

23வது தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகளானது, 05.07.2014  சனிக்கிழமை அன்று லுசெர்ண் மாநிலத்தில்  அமைந்துள்ள Allmendமைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இலங்கையர்களை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை!- இந்தியா?
அவுஸ்திரேலியாவுக்கு அகதி அந்தஸ்து கோரி சென்ற இலங்கையர்களை மீண்டும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று இந்திய அறிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிக முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று ஜெர்மனி சாதனை


ஜேர்மனி அணி 8-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்தது. இதற்கு முன்பு 1954, 1966, 1974, 1982, 1986, 1990, 2002 ஆகிய உலக கிண்ண இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இதில் 1954, 1974, 1990 ஆகிய ஆண்டுகளில் சம்பியன் பட்டம் பெற்று இருந்தது.

ஈராக்கில் ஒன்றாக பிணைத்து கொல்லப்பட்ட 50 உடல்கள் மீட்பு


ஈராக் தலைநகர் பக்தாதிற்கு அருகில் இருக்கும் நகர் ஒன்றில் இருந்து 53 ஆண்களின் உடல்களை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர்.

காசா மீதான இஸ்ரேல் வான் தாக்குதல்கள் தீவிரம்: இதுவரை 28 பலஸ்தீனர்கள் பலி

மேலும் 40,000 துணைப்படையினருக்கு இஸ்ரேல் அவசர அழைப்பு

பலஸ்தீன போராளிகள் இஸ்ரேல் மீது மேலும் பல ரொக்கெட் தாக்குதல்களை நடத்திய தோடு பதிலுக்கு இஸ்ரேல் காசா மீது
வட மாகாணசபை இந்திய அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கைக்கு எதிராக கண்டனம்! 
 வடக்கு மாகாண சுகாதார அமைச்சர்  சத்தியலிங்கத்தின் இணக்கத்துடன் வமாகாணசபையின் தவிசாளர் சி. வி. கே சிவஞானம்யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய உதவி உயர் ஸ்தானிகருக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படும் கடிதம் தொடர்பில்
மதவெறியை தூண்டி வெற்றி பெற முயற்சிக்கும் அரசு - மனோ 
news
 கடந்த காலங்களில் இனவெறியை தூண்டி தேர்தல்களில் வெற்றி பெற்ற அரசாங்கம் தற்பொழுது புதிய வகையில் மதவெறியை தூண்டி தேர்தல்களில் வெற்றி பெறும் முயற்சியில் பொதுபல சேனாவின் பொதுசெயலாளர் ஞானசார தேரரை பயன்படுத்துவதாக ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
 
பா.ஜ.க வின் புதிய தலைவராக மோடியின் நண்பர் ஷா நியமனம் 
news
 மோடியின் நண்பரான அமித் ஷா பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜேர்மனியின் வெற்றியை ஹிட்லர் நீடூழி வாழ்க என வாழ்த்தியவரால் சர்ச்சை 
உலகக் கோப்பை கால்பந்து அரையிறுதியில், பிரேசிலை ஜெர்மனி வீழ்த்தியவுடன், ஹிட்லரைக் குறிப்பிட்டு மலேசிய அமைச்சர் ருவிட்டரில் பதிந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கேரளா வரும் நெய்மர் 
news
பிரேசில் அணியின் முன்னணி வீரரான நெய்மர் முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டதற்கு ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொள்ள கேரளா செல்லவிருக்கிறார்.

கொலம்பியா அணிக்கு எதிராக கால் இறுதி ஆட்டத்தில் பந்தை எடுக்க முயன்ற போது நெய்மரை அந்த அணி வீரர் ஜூவான்
வடக்கின் அபிவிருத்தி மற்றும் கரையோர பாதுகாப்பு குறித்து அவுஸ்திரேலிய குழு ஆராய்வு 
இலங்கையில் உள்ள கடற்கரை கரையோரங்களிலான பாதுகாப்பினை பலப்படுத்துவதற்கான நடவடிக்கையை
மெஸ்ஸியை விட சூப்பர் ஹீரோ யார்?
உலகக்கிண்ண தொடரில் சூப்பர் ஹீரோ யார் என்பதை இதுவரை நடந்த போட்டிகளை வைத்து குறித்து நவீன தொழில் நுட்பத்தில் கணித்துள்ளது பிபா.

கார்ப் பந்தய போட்டியின் போது கண்டிக்கு அழைத்து வரப்பட்ட 300 விலை மாதர்கள்!: ஆளும் கட்சியின் மாகாண சபை உறுப்பினர் குற்றச்சாட்டு
கண்டியில் நடைபெற்ற கார்ப்பந்தய போட்டியின் போது 300 விலை மாதர்கள் அழைத்து வரப்பட்டதாக மத்திய மாகாண சபையின் ஆளும் கட்சி

ராஜ் ராஜரட்ணத்தின் சகோதரர் குற்றவாளியல்ல! ஜூரி தீர்ப்பு
அமெரிக்க உட்சந்தை மோசடியில் கலொன் குழுமத்தின் ஸ்தாபகரான இலங்கையர் ராஜ் ராஜரட்ணத்தின் இளைய சகோதரரான ரெங்கன் ராஜரட்ணம் குற்றவாளியல்ல என்று நியூயோர்க் மாவட்ட ஜூரியால் இனங்காணப்பட்டுள்ளது.

பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உட்பட 7 பேர் விடுதலை! தமிழக அரசின் முடிவுக்கு மத்திய அரசு எதிர்ப்பு
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் சாந்தன், முருகன், நளினி உட்பட 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு ம

9 ஜூலை, 2014

எங்களுடைய ஒற்றுமையினை வெளிப்படுத்திய போது கடந்த மாகாணசபைத் தேர்தலில் மிகப் பெரும்பான்மையாக தமிழ் மக்கள் எங்களுக்கு வாக்களித்தனர். இந்த அமோக ஆதரவினை மக்கள் வெளிப்படுத்திய பின்னர்தான் சர்வதேசம் ஜெனீவா தீர்மானம் தொடக்கம் அனைத்து நடவடிக்கைகளையும், வெளிப்படுத்தி ஒரு தீர்வினைக் காண வேண்டுமென மிகத் தீவிரமாக இருக்கின்றது. சுவி வீரமக்கள் தினத்தில் புளொட் தலைவர் திரு.சித்தார்த்தன் 

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சர்வதேச ஒன்றியங்களின் சார்பில், கழகத்தின் சுவிஸ் கிளையினால் நடத்தப்பட்ட 25ஆவது வீரமக்கள் தினம் 06.07.2014 சனிக்கிழமை

ரெலோ பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் எரிக் சொல்கெய்ம் உடன் சிநேகிதபூர்வ சந்திப்பு

ரெலோ பாராளுமன்ற உறுப்பினர்கள் ரெலோ வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் எரிக் சொல்கெய்ம் உடன் சிநேகித பூர்வ சந்திப்பு ஒன்றை நேற்று 7ம் திகதி சுவிஸில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

ஐ .நா உயர் பதவிக்கு இலங்கை பெண் அதிகாரி தெரிவு
நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான நிரந்தரவதிவிட பிரதிநிதியின் அலுவலகத்தின் இரண்டாவது செயலாளரான சம்மித்ரி

நாளை (10/07/2014) இரவு உலககிண்ண கால்பந்தாட்ட போட்டி இல்லை. இன்னொரு போட்டி இருக்கிறது. அடி, உதை, குத்து, வெட்டு ஆகியவற்றுக்கு பஞ்சம் இருக்காது. சிங்களம் விளங்குமானால், நண்பர்களையும் துணைக்கு அழைத்துக்கொண்டு விழித்திருந்து பாருங்கள்!
"பலய" (பலம்) என்ற சிங்கள மொழி மூல அரசியல் விவாத நிகழ்வில் ஜமமு தலைவர் மனோ கணேசன், எரான் விக்கிரமரட்ன எம்பி ஆகியோர் அரசு தரப்புடன் மோதுகிறார்கள்.
ஹிரு தொலைக்காட்சியில்.......(HIRU டிவி)......... நாளை (10/07/2014) வியாழக்கிழமை இரவு 10 மணி தொடக்கம் நள்ளிரவு வரை நடைபெறும்.

ad

ad