புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூலை, 2014

மதவெறியை தூண்டி வெற்றி பெற முயற்சிக்கும் அரசு - மனோ 
news
 கடந்த காலங்களில் இனவெறியை தூண்டி தேர்தல்களில் வெற்றி பெற்ற அரசாங்கம் தற்பொழுது புதிய வகையில் மதவெறியை தூண்டி தேர்தல்களில் வெற்றி பெறும் முயற்சியில் பொதுபல சேனாவின் பொதுசெயலாளர் ஞானசார தேரரை பயன்படுத்துவதாக ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
 
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு கொழும்பில் இடம்பெற்ற போது அதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
 
அரசாங்கத்தின் இத்திட்டத்தின் முதற்கட்டமாகவே முஸ்லிம்கள் மீது அளுத்கமவில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.இத்திட்டத்தின் தொடர்ச்சியாக இந்துக்கள் மீதான வன்முறையை மேற்கோள்ள திட்டமிட்ட போதும் மோடியின் எதிர்ப்பை  சம்பாதிக்க விரும்பாத காரணத்தினால் அத்திட்டம் கைவிடப்பட்டு கிறிஸ்தவர்கள் மீதான திட்டம் அடுத்த கட்டமாக நடைமுறைக்கு வரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 
 
இத்திட்டத்தின் ஆரம்ப கட்டமாகவே ஞானசார தேரர் மூலமாக போப்பாண்டவரை அவமானப்படுத்த இந்த அரசு திட்டம்
தீட்டியுள்ளதாகவும் இதன் காரணமாகவே போர்த்துகீசர்கள் காலத்தின் ஆட்சி காலத்தில் உடைத்ததாக சொல்லப்படும் பெளத்த விகாரைகள் தொடர்பில் போப்பாண்டவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஞானசார தேரர் இப்போது கூற ஆரம்பித்துள்ளதாக அக்கூட்டத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அக்கூட்டத்தில் தொடர்ந்து அவர் உரையாற்றுகையில் இந்த அரசாங்கத்திற்கு வெள்ளை தோல் கருப்பு தோல் என்று
வெளிநாட்டுகாரர்கள் எவரையுமே பிடிக்காது. சிங்கள பெளத்தம் தவிர எந்த ஒரு இனமும் மொழியும் மதமும் இந்த நாட்டில் இருக்க கூடாது என்ற பைத்தியம்பிடித்தாட்டுகிறது. ஆனால் உலகம் இனிமேலும் இவர்களை கருத்தில் எடுக்காது எனவும் இனவாதிகள் எவ்வளவுதான் கூச்சல் போட்டாலும் பதவி சுகங்களுக்காக அரசில் உள்ள தமிழர்களும் முஸ்லிம்களும் எவ்வளவுதான் அரசின் அழுக்கை கழுவி குடித்தாலும் இந்த அரசின் நாட்கள் இப்போது எண்ணப்பட்டு வருவதாகவும் இவர்களின் கழுத்தில் சுருக்கு கயிறு மெல்ல மெல்ல இறுக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

ad

ad