புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூலை, 2014


கார்ப் பந்தய போட்டியின் போது கண்டிக்கு அழைத்து வரப்பட்ட 300 விலை மாதர்கள்!: ஆளும் கட்சியின் மாகாண சபை உறுப்பினர் குற்றச்சாட்டு
கண்டியில் நடைபெற்ற கார்ப்பந்தய போட்டியின் போது 300 விலை மாதர்கள் அழைத்து வரப்பட்டதாக மத்திய மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கண்டி நகரில் முக்கிய பிரமுகர்களின் புதல்வர்கள் சிலர் இரவு நேர கார் ஓட்டப் பந்தயம் நடத்திய தினத்தில், 300 விலை மாதர்கள், கண்டிக்கு அழைத்து வரப்பட்டு ஆடம்பர விடுதிகளில் தங்க வைக்கப்பட்டிருந்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாநாயக்க தேரர்களின் எதிர்ப்பையும் மீறி இந்த கார் ஓட்டப் பந்தயம் நடத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கார் ஓட்டப் பந்தயத்தை முன்னிட்டு கண்டிக்கு அழைத்து வரப்பட்ட விலை மாதர்களில் வெளிநாட்டுப் பெண்களும் இருந்தனர் எனவும் தான் சுமத்தும் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் எந்த சவாலையும் ஏற்க தயாராக இருப்பதாகவும் பியதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
இப்படியான இரவு நேர கார் ஓட்டப் பந்தயத்தை உலக பாரம்பரிய வழிப்பாட்டு நகரமான கண்டியில் நடத்தி நகரத்தை மாத்திரமல்ல பௌத்த மத தலைவர்களான மாநாயக்க தேரர்களையும் இழிவுப்படுத்தியுள்ளனர்.
இதன் மூலம் வரலாற்று சிறப்புமிக்க கண்டி நகருக்கு அவமதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் கார் ஓட்டப் பந்தயம் காரணமாக கண்டி வாழ் மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டது எனவும் நிமல் பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இரவு நேர கார் ஓட்டப் பந்தயத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நமல் ராஜபக்ஷ முன்னின்று நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ad

ad