புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 செப்., 2012

உலக கோப்பை  ஆட்டத்தில் இந்தியா வெற்றி
இலங்கையில் நடந்து வரும் 4-வது உலககோப்பை தொடரின் மூன்றாவது ஆட்டம் கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது.
இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக காம்பீரும், ஷேவாக்கும் களமிறங்கினர். காம்பீர் 10 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அதன்பின்னர் ஷேவாக்குடன், கோலி ஜோடி சேர்ந்தார்.
சிறிது நேரத்தில் ஷேவாக் 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் வந்த யுவராஜ் சிங் சிக்சருடன் தனது இன்னிங்சை ஆரம்பித்தார். ஆனால் தொடர்ந்து அவரால் அதிரடியை வெளிப்படுத்த முடியவில்லை. யுவராஜ் 18 ஓட்டம் எடுத்து வெளியேறினார்.
அதன்பின்னர் கோலியுடன் ரெய்னா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நேர்த்தியாக ஆடியது. கோலி சிறப்பாக ஆடி 38 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதற்கடுத்த பந்திலேயே அவர் ஆட்டமிழந்தார்.
பின்னர் இறுதி கட்டத்தில் ரெய்னாவும் 38 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 159 ஓட்டங்கள் குவித்தது. டோனி 18 ஓட்டங்களுடனும், ரோகித் ஒரு ஓட்டத்துடனும் களத்தில் இருந்தனர்.
அதன்பின்னர் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியின் முகமது ஷாசத் 18 ஓட்டங்கள் எடுத்து பாலாஜி பந்தில் ஆட்டமிளந்தார்.
சிறிது நேரத்தில் கப்டன் நௌரோஸ் மங்கள் 22 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் கரீம் சாதிக் 26 ஓட்டங்களுடனும், ஸ்டானிக்சாய் 6 ஓட்டங்களுடனும் யுவராஜின் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டம் இழந்தனர்.
பின்னர் வந்த வீரர்களில் முகமது நபி தவிர யாரும் குறிப்பிடும்படி ஆடவில்லை. நபி 31 ஓட்டங்களில் ஆட்டமிளந்தார். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 19.3 ஓவர்களில் 136 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சிறப்பாக விளையாடிய இந்திய அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ad

ad