புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 செப்., 2012

அயர்லாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது அவுஸ்திரேலியா
அயர்லாந்து அணிக்கெதிரான டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் லீக் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கையில் நடைபெற்றுவரும் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது லீக் போட்டியில் அவுஸ்திரேலியா, அயர்லாந்து அணிகள் இன்று மோதின.
நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
தொடக்க வீரராக களமிறங்கிய போர்டர்பீல்டு முதல் பந்திலேயே ஓட்டங்களின்றி ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரரும் 7 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
பின்பு களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக கெவின் ஓ பிரையன் 35 ஓட்டங்களும், நைல் ஓ பிரையன் 20 ஓட்டங்களும் எடுத்தனர்.
20 ஓவர் முடிவில் அயர்லாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 123 ஓட்டங்கள் எடுத்தது. பந்துவீச்சில் அவுஸ்திரேலியா சார்பில் வாட்சன் 3 விக்கெட்டுகளும், ஸ்டார்க் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இதனையடுத்து 124 ஓட்டங்கள் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 15.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 125 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்றது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் 26 ஓட்டங்களும், ஷேன் வாட்சன் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 51 ஓட்டங்களும் எடுத்தனர்.
சகலதுறை வீரராக கலக்கிய வாட்சன் ஆட்டநாயகனாக தெரிவானார்.

ad

ad